சுகரில் கலக்கும் சிம்ரன் திரிஷா !

சினி நியூஸ் சினிமா

cimran - 2026
சிம்ரனும், திரிஷாவும் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து  முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பறந்தவர்கள்.  இவர்கள் இருவரும் முதன்முதலாக ஜோடி படத்தில் இணைந்து நடித்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

முன்னதாக 1999-ம் ஆண்டு ரிலீசான ஜோடி படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா. ‘பேட்ட’ படத்தில் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் இல்லை.
thirisha - 2026
இந்தநிலையில் மீண்டும் சிம்ரன் – த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் கலந்து உருவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வரும் புதிய படத்தில் சகோதரிகளாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.மேலும் சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வரும் இப்படத்திற்கு சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
trishaandsimran 1 - 2026
இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிரடி கலந்த ஆக்சனை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சுகர் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.