ஏ1 திரைப்படத்துக்கு எதிராக பிராமண சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர். பிராமண சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ஏ1 திரைப்படத்தை தடைசெய்யக்கோரி மேற்கு மண்டல ஐஜி இடம் பிராமண சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் மாதவன், தேசிய துணை தலைவர் ராமசுந்தரம், செயலாளர் வெங்கட்ரமணி உள்பட பலர் நேற்று கோவை மேற்கு மண்டல அலுவலகம் வந்து ஐஜியிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் நடிகர் சந்தானம் நடிக்கும் ஏ1 என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பிராமண சமுதாயப் பெண்களை காதல் என்ற பெயரில் இழிவாகவும் கொச்சைப்படுத்தியும் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். படத்தில் நடித்துள்ள சந்தானம் படக்குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கோவையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.