December 6, 2025, 5:12 AM
24.9 C
Chennai

கிரிக்கெட் வீரராக நடிப்பது ஒரு சவால் ! விஜய் சேதுபதி !

muthiya murali - 2025இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

’83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் ஒரு வீரராக இருந்த முத்தையா முரளிதரன் அடுத்தடுத்து பல வித்தியாசமான யுக்திகளை கையாண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை குவித்தார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையுடையவர்.  அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரின் சிறந்த பந்து வீச்சினால் 2007ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்றது. இவரின் சுழற்பந்து வீச்சு பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் ஐசிசி நடத்திய அனைத்து பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்துவீசி வருவதாக ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார்.

மிகச்சிறிய நாடான இலங்கை, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவர் முத்தையா முரளிதரன்

இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

’83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா சினிமாவில் இது பயோபிக் காலம். சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டுவிட்டன. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பது இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம். இதன் சிறப்பு என்னவெனில், முத்தையா முரளிதரனாக வேடம் ஏற்கப்போவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.vijaysethupathi1 e1564390776897 - 2025இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது இருந்தே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய முத்தையா முரளிதரன், ‘தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” எனது வாழ்வின் கதையை படமாக தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர். என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளதாகவும் தார் மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான் இந்த படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன்”, எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் பெயர் ‘800’ என வைக்கப்பட உள்ளதாகவும், படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருப்பதாகவும் வட்டாரத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கவிருக்கும் இப்படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் இன்னபிற கிரிக்கெட் சார்ந்த நாடுகளில் நேர்த்தியாக படமாக்கப்பட இருக்கின்றன.

படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ‘கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதையில், அவரது கேரக்டரில் நடிக்க இருப்பது உண்மையிலேயே சவாலான விஷயம்தான். இதை நான் ஆவலுடன் எதிர்கொள்வதற்கு காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரனும் படத்தில் நடிக்கிறார். அவர் எனக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளிக்கிறார்’ என்றார்.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories