மகளின் காதல் பற்றி தந்தையின் கருத்து !

சினி நியூஸ் சினிமா

ponikapur 1 - 2026
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தின் ஹீரோவான இஷான் கட்டாரும்(நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி), ஜான்வியும் காதலிப்பதாக பேசப்படுகிறது.

இஷான், ஜான்வி காதலுக்கு போனி கபூர் பச்சைக் கொடி காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

இஷானும், ஜான்வியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அதனால் அவர்கள் நண்பர்களாகியிருக்கக்கூடும். நான் என் மகளையும், அவர் இஷானுடன் நட்பில் இருப்பதையும் மதிக்கிறேன் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இஷான் கட்டார் அடிக்கடி ஜான்வியின் வீட்டிற்கு செல்கிறார் என்றும், அதை போனி கபூர் கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கபூர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, தடக் படம் ரிலீஸான பிறகு இஷான் ஒரு முறை கூட ஜான்வியின் வீட்டிற்கு வந்தது இல்லை. அவர்களுக்கு இடையே நட்பை தாண்டி எதுவும் இல்லை என்றார்
.janvi - 2026
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 26ம் தேதி வெளியான டியர் காம்ரேட் தெலுங்கு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் ரூ. 6 கோடிக்கு வாங்கியுள்ளார். அந்த படத்தில் ஜான்வியும், இஷானும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று கரண் தெரிவித்துள்ளார்.

ஜான்வி ரூஹிஹப்சா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை 10 கிலோ குறைத்தார். இந்நிலையில் கார்கில் கேர்ள் படத்தில் நடிப்பதற்காக தனது எடையை அதிகரிக்கப் போகிறாராம் ஜான்வி. அம்மா ஸ்ரீதேவி, அக்கா ஜான்வி வழியில் குஷி கபூரும் நடிகையாகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.