பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் நடித்து, வெளியாக உள்ள படம் கோமாளி. வரும் 15ம் தேதி ரிலீசாகிறது.
இதன் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரஜனி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி சர்ச்சைக்குள்ளானது.பிறகு சர்ச்சைக்குறிய அக்காட்சி நீக்கப்படும் என் இதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதியளித்ததை அடுத்து அடங்கியது.
இப்படம் குறித்து ஜெயம் ரவி கூறியதாவது: இதுவரை குடும்ப கதைகளில் நடித்து வந்த நான், தனி ஒருவன் மற்றும் அடங்க மறு படத்தில் சமூக சிந்தனை கொண்ட கதையில் நடித்தேன். இனி ஒவ்வொரு படத்திலும் சமூக முன்னேற்ற கருத்துகளை வலியுறுத்தி நடிப்பேன். கோமாளி படத்தில் 9 கெட்டப்புகளில் நடித்துள்ளேன்.
17 வயது பள்ளி மாணவன் கெட்டப்பில் நடிக்க, உடல் எடையை 17 கிலோ வரை குறைத்தேன். அதற்காக கேரடும், தக்காளியும் மட்டும் சாப்பிட்டேன். 16 வருடங்கள் கோமாவில் இருந்த ஒருவன், திடீரென்று சுயநினைவுடன் மீண்டெழுந்து நடமாடுகிறான்.
சமுதாயம் அவனை வித்தியாசமாக பார்க்கிறது. அவனும் இந்த சமுதாயத்தை பழைய நிலையில் இருந்து புதிய நிலையில் பார்க்க முடியாமல் தவிக்கிறான். சென்னை வெள்ள பாதிப்பு மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்றார்.



