அதனால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் திரை நட்சத்திரங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வரிசையில் த்ரிஷா வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
உங்கள் ஒவ்வொருவரைப் போலவே நானும் கொரோனா கிருமிக்கு எதிரான இந்திய அரசின் முயற்சியை ஆதரிக்கும் வகையில் 21 நாட்கள் வீட்டிலேயே இருக்கப் போகிறேன். இந்த கிருமி யாரை வேண்டுமானாலும் தாக்கும். இது ஒரு குறிப்பிட்ட மக்கள், இனம், மாநிலம் என்று பார்த்துப் பாதிப்பதில்லை. உங்களுக்கு என்ன வயது, பார்க்க எப்படி இருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், என்ன மொழி பேசுகிறீர்கள் என்பதெல்லாம் இந்த கிருமிக்கு முக்கியமல்ல. இது போன்ற நோய்த் தொற்று நேரத்தில், அன்பைப் பரப்புவதும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதும் முக்கியம்.
வீட்டில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதனால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதே எனக்கு வீட்டில் இருக்க ஊக்கத்தைத் தருகிறது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். அன்பைப் பரப்புங்கள், களங்கத்தை பரப்பாதீர்கள். இவ்வாறு த்ரிஷா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
Hear from Trisha Krishnan, #UNICEF India Celebrity Advocate, on how #COVID19 does not discriminate and why you should #StayHomeSaveLives.#CoronavirusLockdown #Lockdown21 @trishtrashers @vijayabaskarofl @drbeelaIAS @nhm_tn pic.twitter.com/Kk9vT6IDsv
— UNICEF India (@UNICEFIndia) March 26, 2020