இரண்டாவது நாளில் ஆடிய நடனம் என்று தற்போது ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியிருக்கிறார்.
கோமாளி பட நாயகி சம்யுக்தா ஸ்விம் சூட்டில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு கவர்ச்சியான நடனம் ஒன்றை ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
நடிகை சம்யுக்தா தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிலே இருந்து வருகிறார் .இவ்வாறு இவர் இருக்கும் சமயத்தில் நடனமாடி மனதை திடமாக வைத்து கொள்கிறார். அதில் தான் தனிமைபட்டிருக்கும் இரண்டாவது நாளில் ஆடிய நடனம் என்று தற்போது ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியிருக்கிறார்.
பலரும் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிலே இருந்து வருகிறார்கள். ஆனால் வீட்டிலே இருப்பது பலருக்கும் மன உளைச்சல் கொடுக்கிறது. இதனால் தங்கள் மனதை தாங்களே உறுதியாக வைப்பதற்கு பலவித முயற்சிகளை செய்து வருகின்றனர் .
அதன் வாயிலாக கோமாளி நாயகி சம்யுக்தா ஸ்விம் சூட்டில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு கவர்ச்சியான நடனம் ஒன்றை ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த பாடலுக்கு தன் வீட்டினுள்ளே நடனமாடியிருக்கும் சம்யுக்தா எந்த அலங்காரமும் இன்றி மேக்கப்பும் இன்றி ஆடியிருக்கிறார். மேலும் இந்த வீடியோவை படத்தொகுப்பும் செய்யாமல் பகிர்ந்துள்ளார் சம்யுக்தா.
இந்த வீடியோ பதிவின் கீழ் சம்யுக்தா லாக்டவுன் 2ம் நாள் என்று பதிவிட்டு இசையும் நடனமும் தான் என் காயங்களை ஆற்றி என்னை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது ஒரு சிறிய பதிவு நண்பர்கள் அனைவரும் நீங்கள் நடனமாடுவதை பகிருங்கள் என்று கேட்டு கொண்டதால் தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளேன் என்று கூறியுள்ளார் சம்யுக்தா.
சம்யுக்தா இதே போல பல நேரங்களில் தனது உடற்பயிற்சி வீடியோவையும் நடனமாடும் வீடியோவையும் பகிர்ந்து உள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தன் மனதை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்ற நிலையில் இதை தொடர்ந்து செய்து வருகிறார். அதில் ஒரு சிறிய பகுதியை பகிர்ந்து உள்ளார் .
கொரோனா பாதிப்பு காரணமாக 3வது நாள் இந்திய ஊரடங்கை தொடர்ந்து வரும் மக்கள் பலர் வீட்டிலே இருப்பதை வெறுத்துள்ளனர். அவர்கள் பலருக்கும் இசை ஒரு மருந்தாக இருக்கும் என்பதை நினைவூட்டியுள்ளார் சம்யுக்தா