கோலிவுட்டின் கவனிக்கத் தகுந்த ஹீரோயினாக மாறியிருக்கிறார்
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் இவர் கோலிவுட்டின் கவனிக்கத் தகுந்த ஹீரோயினாக மாறியிருக்கிறார்
.மாளவிகா தற்போது தனது குடும்பத்துடன் வீட்டில் இருக்கிறார். தான் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், “எனது அப்பா, அம்மாவுக்காக நான் வீட்டிலேயே இருக்கிறேன்”, என ஒரு பேப்பரில் எழுதி வைத்திருக்கிறார்.
மேலும், “எனது பெற்றோர், சகோதரர் மற்றும் நான் நேசிப்பவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது பொறிப்பில்லாதனம் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வைரஸ் தாக்க வழிவகை செய்துவிடக்கூடாது. வீட்டிலேயே இருங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களுடைய அஜாக்கிரதை மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதபடி பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்”, என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
The health of my parents, my brother, my loved and close ones is my most important priority in life. Us being irresponsible and negligent puts them in danger of contracting harmful virusus. #stayhome #staysafe #breakthechain #istayhomefor pic.twitter.com/vspHY7oEQE
— malavika mohanan (@MalavikaM_) March 24, 2020