தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி முடிவெடுத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தான் அவர் கடைசியாக நடித்து வெளிவந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
தன்னுடைய புதிய படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் புதிய பட அறிவிப்பை வெளியிடுவது குறித்து விஷ்ணு விஷாலுக்குக் குழப்பம் ஏற்பட்டது.
தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை ஏப்ரல் 11 அன்று வெளியிடலாமா என ட்விட்டரில் ரசிகர்களிடம் கருத்து கேட்டார் நடிகர் விஷ்ணு விஷால். ரசிகர்கள் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறினார்.
Hi
Wanted to start my next movie on April 11th, but life had different plansI still want to be positive n share the details on the same date, but only with your approval
We tried something different n have made a ‘Title Announcement Teaser’, but your decision will b final ?
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 9, 2020