கேரளத்தில்… கொரோனா வார்டில் பூனைகள் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
cats 1 - 2026

கொரோனா வார்டில் 5 பூனைகள் திடீர் மரணம் அடைந்துள்ளன.

கேரளத்தில் கொரோனா வார்டில் நடமாடி வந்த ஐந்து பூனைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதித்துள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் 130 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கே பூனைகள் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதையடுத்து மருத்துவர்கள் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கவச உடை அணிந்து வந்து பூனைகளை பிடித்துச் சென்றனர்.

அவ்வாறு பிடித்துச் சென்ற பூனைகளில், ஒரு பூனை அதன் இரண்டு குட்டிகள் உள்பட 5 பூனைகளை தனியாக கூண்டில் அடைத்து பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் தாய்ப்பூனை உயிரிழந்தது. அதன் உடல் கூறுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மறுநாளே மீதமுள்ள நான்கு பூனைகளும் உயிரிழந்தன. அவற்றின் உடற்கூறும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு, பூனைகளுக்கு உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அனைத்து பூனைகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.