திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர்.
கன்னட திரைத்துறையை சேர்ந்தவர்கள் நடிகை அர்னவ் வின்யாஸ் மற்றும் நடிகை விஹானா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அர்னவ்,- விஹானாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர்.
தங்களுடைய திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த இருவரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இயலவில்லை. எனவே மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது மணமகனும், மணப்பெண்ணும் மாஸ்க் அணிந்திருந்தனர். இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.