
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு வர அவர் தயங்கி வந்தார்.
இந்நிலையில் திடீரென இன்று காலை தன்னுடைய திருமண மண்டபத்தில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். அதில், அரசியல் கட்சி அறிவித்தால் வெற்றி பெற முடியுமா? கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக பரப்புரை செய்வது எப்படி என்பது உள்ளிட்ட விஷயங்களை 2 மணி நேரம் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் ஜனவரியில் கட்சி துவங்குவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பான அறிக்கையை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Posts by தினசரி செய்திகள்:
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!


