சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா எனக்கு மிக முக்கியமான திரைப்படம். ‘இனிது இனிது’ திரைப்படத்திற்கு பிறகு நண்பர்கள் மீண்டும் இப்படத்தில் நடிக்கிறோம். விமல் மற்றும் நாராயண் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் நண்பர்கள். ஒரு கிரிக்கெட் மேட்ச் மாதிரி பாக்குற மாதிரி சந்தோஷமாக இருந்தது.” என ஆரம்பித்தார் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ நாயகன் ஷரண். இந்தப் படத்தில் நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஆட துடிக்கும் ஒரு கிரிக்கெட்டர் சார்லஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் சத்தியமூர்த்திக்கு நன்றி. இந்த நொடியை வாழவேண்டும் என்று என்னும் ஒரு கதாப்பாத்திரம். ஒரு கிரிக்கெட் வீரராக இருக்க எனக்கு மிக எளிமையாக இருந்தது. அனைவரும் பிடிக்கும் ஒரு காதல் பகுதியும் இப்படத்தில் இருக்கு.” CSK படம் ஒரு T20 மேட்ச் மாதிரி இருக்கையின் முனையில் உட்கார வைக்கும் விறுவிறுப்பாக செல்லும் த்ரில்லர் திரைப்படம். மார்ச் 27 ஆம் தேதி CSK திரைப்படம் வெளிவருகிறது. இந்திய அணியும் உலக கோப்பை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் என நம்புகிறேன்.” என்றுக் கூறினார் ஷரண்.
சிஎஸ்கே – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா ஒரு T20 மேட்ச் மாதிரி: ஷரண்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories