இப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார்.
ஸ்ரியா குறித்து புதிதாக பரிச்சயம் செய்வதற்கு தேவையில்லை. 20 ஆண்டுகளாக திரை ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்ட அழகு சுந்தரி இவர்.
பல ஆண்டுகள் ஓய்வின்றி சினிமாவில் நடித்தார். ஒன்று இரண்டல்ல… 50 சினிமாக்களுக்கு மேலாகவே நடித்துள்ளார். ஸ்டார் ஹீரோக்கள், புதிய ஹீரோக்கள், புதியவர்கள் என்று வித்தியாசமின்றி அனைவரையும் சமமாக பார்த்து நடித்துள்ளார். சமுதாயத்திற்கு நீதி செய்வதில் சிரியாவுக்கு பின்தான் யாராயிருந்தாலும்.
சென்ற ஆண்டு வரை கூட பிஸியாக இருந்த இந்த அழகி அண்மையில் திருமணம் புரிந்து கொண்டார் . தான் காதலித்த ரஷ்யன் பாய் பிரண்டு ஆண்ட்ரியா கொஸ்சீவை திருமணம் செய்துகொண்ட ஸ்ரியா திருமணத்திற்கு பின் தன் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறுகிறார்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முன்பு இருந்ததை விட இப்போதுதான் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். இந்த உலகில் தனக்கு சரியான சமயத்தில் சரியான மனிதர் கிடைத்தார் என்று ஆகாயத்தில் மிதக்கிறார். வீட்டு வேலைகள் கூட இருவரும் சேர்ந்து செய்கிறோம் என்று கூறுகிறார் ஸ்ரியா. அதோடுகூட டிபன் கூட தன் கணவர் தயார் செய்வார் என்றும் புகழ்கிறார்.
இப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார்.

வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் இருக்கும் என்றும் அவற்றை தியானம் மூலம் விலக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இவ்வாறு யோகாவும் தியானமும் அனைத்திற்கும் பதில் அளிக்கக் கூடியது என்று கூறுகிறார் ஸ்ரியா. சோஷல் மீடியாவில் வரும் ட்ரோலிங்கை தான் கண்டுகொள்வதில்லை என்றும் விளக்கமாகக் கூறுகிறார் இந்த அழகி.
ரஷ்யாவின் ரெஸ்டாரன்ட் முதலாளியான ஆன்ட்ரி கோஸ்சீவை மார்ச் 2018ல் திருமணம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் இந்த அழகான நடிகை. பார்சிலோனாவில் செட்டில் ஆகி உள்ளார். அவர் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அடிக்கடி அப்டேட் செய்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவர் தான் திருமணம் புரிந்து கொண்டதற்கான காரணம் தன் கணவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்று கூறியுள்ளார். அதாவது தன் கணவர் பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்துவிடுவார் என்று அவரை புகழ்ந்து வருகிறார். அதனால்தான் அவரை திருமணம் செய்யத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
அதோடுகூட அல்லு அர்ஜுன், ஆர்யா, ஜெயம்ரவி போன்றவர்களிடம் மனைவிக்கு பாத்திரம் தேய்ப்பதில் உதவும் படியாக தெரிவித்து வருகிறார். இந்த சோசியல் மீடியா போஸ்டில் கணவருக்கு ஒரு முத்தம் கொடுத்து போஸ்டை முடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது



