November 10, 2024, 9:51 PM
28.8 C
Chennai

ராமநாதபுரம் இறால் பண்ணை பின்னணியில் உருவான ‘கொடுவா’ பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!!  

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்.

சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “கொடுவா”. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  

ALSO READ:  இம்முறை சபரிமலை நிலக்கல் பார்க்கிங் கட்டணம் எவ்வளவு…?

மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி  உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது.  இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு  அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் நடிக்க உடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேற்று யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டைட்டில் டீசர் மற்றும் இன்று ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

ALSO READ:  தேசிய நெல் திருவிழா: 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு!

தொழில் நுட்ப குழு 
தயாரிப்பு – பிளேஸ் கண்ணன் (Dwarka Productions LLP)
இயக்கம் – சுரேஷ் சதையா
இசையமைப்பாளர் – தரண் குமார்
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து
படத்தொகுப்பு – V J சாபு ஜோசப்
கலை இயக்கம் – சுரேஷ் கல்லரி
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)

author avatar
Dhinasari Reporter

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிறந்த தேசபக்தர் நெல்லை கணேஷ் என்ற ‘டெல்லி கணேஷ்’!

அண்மையில் சதாபிஷேகம் நடந்தது. என்னால் செல்ல முடியவில்லை. செல்போனிலாவது பேசி ஆசி பெறலாம் என நினைத்திருந்தேன்.

பஞ்சாங்கம் நவ.10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: நவ.10ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

IND Vs SA T20: சஞ்சு அதிரடியில் அபார வெற்றி பெற்ற இந்தியா!

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் –08.11.2024

பஞ்சாங்கம் நவ.09 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.