விஜய் 60வது படம் பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல்!

அட்லீ படத்தையடுத்து விஜய் பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், விஜய்  நடிக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எங்கள் வீட்டுப்பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய்60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை).

 இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.  பி. நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன்  பி வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள்  மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.