இயக்குனர் ராதா மோகனின் நகைச்சுவை சுழலில் ‘உப்பு கருவாடு’

நட்சத்திர படங்கள் தான் ஓடும், சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்றுக் கூறப்படுவதை உடைத்து எறிந்து இருக்கிறது ‘உப்பு கருவாடு’. திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப் படத்தை திரை இட பெருகி வரும் கோரிக்கையே இதற்க்கு சாட்சி.

ஊடகங்களின் பாராட்டு, திரை உலகினரின் பிரமிப்புடன் கூடிய பாராட்டு, படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களிடம் இந்தப் படத்தை பாராட்டி, பார்க்க வேண்டிய படம் எனக் கூறுவது ஆகியவை படத்தின் வெற்றிக்கு உரமாக செயல் படுகிறது.

நடித்த பெரும் பாலான படங்களில் வெற்றி பெரும் அதிர்ஷ்ட தூதர் கருணாகரன், மிக சிறந்த நடிப்பு என எல்லோராலும் பாராட்ட படும் நந்திதா, வித்தியாசமான வேடத்தில் கலக்கும் எம் எஸ் பாஸ்கர், புதிய வரவான ‘டவுட்’ செந்தில், விழா நோக சிரிக்க வைக்கும் மயில் சாமி, தனது வசன வரிகளால் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த வசன கர்த்தா பொன் பார்த்திபன், துள்ளலான பாடல் மற்றும் பின்னணி இசையால் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், தனக்கே உரிய ஒரு பிரத்தியேக வடிவத்தில் படத்தை செதுக்கிய இயக்குனர் ராதா மோகன், தேவைக்கேற்ப திட்டமிட்டு செலவு செய்த தயாரிப்பாளர் ராம்ஜி, முறையாக விளம்பரம் செய்து, போட்டிக்கிடையே நிறைய திரை அரங்குகளில் படம் திரை இட்ட விநியோக நிறுவனம் ஆரா சினிமாஸ் என ‘உப்பு கருவாடு’படத்தின் வெற்றிக்கு வித்து இட்டவர்கள் ஏராளம்.

‘நாங்கள் எல்லோரும் எங்களுக்கு இடப்பட்ட பணியை செவ்வனே செய்தோம். ஆயினும் ஒரு நல்ல captain ஆக இந்தக் திறம் பட நடத்தி செல்லலும் இயக்குனர் ராதா மோகனுக்கு தான் இந்த வெற்றி உரியது.

திரை இட பட்ட இடங்களில் எல்லாம் பெருகி வரும் உற்சாகம் ஒரு நல்ல படத்தை விநியோகித்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கதை இருந்தால், ரசிகர்களுக்கு சின்ன படமும் பெரிய படம் தான் என உணர்த்திய படம் தான் ‘உப்பு கருவாடு’ எனக் கூறினார் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.