10/07/2020 5:54 AM
29 C
Chennai

பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே! பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

சற்றுமுன்...

இந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை!

அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

திருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்!

விசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

பாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.
பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
bigilu பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே!

பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

விஜய் நடிக்க, அட்லியின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இன்று வெளியானது பிகில் படம். விஜய் ஜோடியாக நயன்தாரா! தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்த்துப் பழகி சலித்த முகமாகத்தான், வழக்கம் போல் அழகுப் பதுமையாக வந்து போகிறார் நயன்தாரா. நன்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய நயன்தாராவுக்கு இந்தப் படத்தில், விஜய்யை காதலிப்பதை தவிர பெரிதாக வேலை எதுவுமே வைக்கவில்லை இயக்குனர். பாவம்…!

bigil4 பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

முதல் பாதி நீளமாக உள்ளது. இதனால் படம் மெதுவாகச் சென்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. இதில் இயக்குனர் அட்லி பயங்கரமாக தடுமாறியிருக்கிறார். இரண்டாம் பாதி அந்த அளவுக்கு மோசமில்லை என்கின்றனர் ரசிகர்கள். ஆனால் முதல் பாதியிலேயே ஜவ்வாக இழுப்பதால், பொறுமை இழந்து, எப்படா வீட்டுக்குப் போவோம் என்ற மன நிலைக்கு வந்துவிடுகின்றனர் ரசிகர்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பதால், அந்த நேரத்துக்கு ஹிட் அடித்து ஓய்ந்து போகும் ரகத்தில் பாடல்கள் இந்தப் படம் வரும் முன்பே ஹிட் அடித்து, யூடியூப்பில் வைரலாகி வரவேற்பைப் பெற்று விட்டது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல்கள் தான். குறிப்பாக, சிங்கபெண்ணே பாடல் காட்சிகள் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பாடல் கட்சியைத்தான் ரசிகர்கள் அடிக்கடி தேய் தேய் என்று தேய்க்கப் போகும் டிவி.,க்களில் பார்த்துவிடப் போகிறார்களே!

bigil film1 பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

விஜய்யின் ஒரு கதாபாத்திரமான ராயப்பன் பாத்திரத்தில், ஒருவித மேனரிஸம் திணிக்கப்பட்டுள்ளது… பொருந்தாத வகையில்!
விஜய் அரசியலுக்கு வருவார், வருவார் என்று அவரது தந்தையால் பிகிலு ஊதி உசுப்பேத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதை நம்பும் அவரது ரசிகர்களுக்காக, அட்லி சில பன்ச் வசனங்கள் வைத்திருக்கிறார். ஆனால் கதை விஷயத்தில் அட்லி கோட்டை விட்டுவிட்டார்! இதை விஜய் ரசிகர்களே திரையரங்கை விட்டு வரும் போது சோகத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.

பிகிலுவின் கதைச்சுருக்கம் இதான்….

bigil audio out பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

ராயபுரத்தை தனது பிடியில் வைத்திருக்கிறார் ராயப்பன் (அப்பா விஜய்). அவருக்கு தன் மகன் மைக்கேல் தன்னை போன்று ரவுடி ஆகாமல் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. (அதாவது மைக்கேல் ராயப்பன்…! இந்தப் பெயரை எங்கோ கேட்டது போலிருக்கே…! அடடே…!)

மைக்கேலும் அப்பாவின் ஆசைப்படி கால் பந்தாடுகிறார். அப்படியே இந்திய அணிக்கும் தேர்வாகி விடுகிறார். தில்லிக்கு புறப்படும் நேரத்தில் மைக்கேலின் வாழ்க்கையில் பெரும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவரின் வாழ்க்கை தடம் மாறுகிறது. அவரது அப்பா ராயப்பன், தன் மகன் மைக்கேல் வாழ்க்கையில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விடுகிறது.

விஜய்யின் வாழ்க்கை வேறு மாதிரியாக மாறிப் போனதால், அவரால் கால்பந்தாட்டத்தில் ஈடுபட முடியாமல் போகிறது.

Bigil 1st Single Singap Penney From July 23a பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

விஜய்யின் நண்பரான கதிர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளாராக இருக்கிறார். அவரை வில்லன் டேனியல் பாலாஜி கத்தியால் குத்திவிட, இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்நிலையில் அந்த பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மைக்கேல் நியமிக்கப்படுகிறார்.

ஒரு ரவுடியை எப்படி பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஆக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அப்போதுதான்… பிளாஷ் பேக் ஸீன். மைக்கேல் பிகிலாக இருந்த திகில் காட்சிகள் காட்டப் படுகின்றன.

இதன் பின்னர், பிரச்னைகள் முளைக்கின்றன. அவற்றை எல்லாம் அடித்து துவம்சம் செய்து, விஜய் எப்படி அந்த பெண்கள் அணியை ஒரு வழிக்குக் கொண்டு வருகிறார்… ஒரு வழியாக எப்படி வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் கதை. மகன் விளையாட்டு வீரராகாவிட்டாலும், அந்தப் பின்னணியில் பயிற்சியாளர் ஆகி, ஆக… எப்படி அவர் தந்தையின் கனவை நிறைவேத்துகிறார் என்பது தான் கதை மூலம் சொல்லப் படும் நீதி.

மடக்கு ஊதி… அதாவது பிகிலு படத்தில் என்ன வசனம் இருந்தாலும் யாரும் வாய தொறந்திராதீக சாமிகளா…
படத்து சோலிய அட்லியே முடிச்சிருவானாம்…
பார்த்தவுங்க சொல்றாங்க
!

– சமூகத் தளங்களில்…

முதல் பாதியிலயே
அப்பா விஜய்ணாவ வில்லன் கொன்னுடுறான்…
இரண்டாம் பாதில
படம் பாக்க வந்த எல்லாரையுமே அட்லி கொன்னுடுறான்…
Begil பரிதாபம்…

– சமூகத் தளங்களில்…
- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...