Homeஉரத்த சிந்தனைமலையாள மசாலாவும்... ஆச்சி அரசியலும்..!

மலையாள மசாலாவும்… ஆச்சி அரசியலும்..!

achimasala - Dhinasari Tamil

எந்த ஒரு மசாலா நிறுவனமும் பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மசாலா தயாரிப்பதில்லை. மிளகாய், மல்லி, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நமது விவசாயிகளிடம் இருந்தே வாங்கப்படுகின்றன.

பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது நம் நாட்டு விவசாய முறையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட நிலையில் அதற்கான முழு பழியையும் ஒரு நிறுவனத்தின் மேல் போட்டு அதை நம்பி வாழும் தொழிலாளர்களையும், அதை நம்பி மூலப்பொருட்களை பயிரிடும் விவசாயிகளையும் நடுத் தெருவிற்கு கொண்டு வரக்கூடிய கார்ப்ரேரேட் லாபி அரசியலில் நாமும் தெரியாமல் பகடைக்காய் ஆகிவிடக் கூடாது.

குறிப்பாக கேரளாவில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் ஒரு தனித்த வர்த்தக லாபியை கொண்டிருக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்டுகளில் மலையாளிகளின் கைதான் இன்னும் ஓங்கியே இருக்கிறது. லூலு, மனாமா, கே.எம்.டிரேடிங் உள்ளிட்ட கேரளாயிஸ்ட்டுகளை தாண்டி அரபு நாடுகளில் யாரும் பெரிதாக வர்த்தகம் செய்துவிட முடியாது. அந்தளவுக்கு வர்த்தகத்தை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள்.

இந்திய மசாலா பொருட்களிள்கூட கேரளா பிராண்டுகள்தான் பரவலாக கிடைக்கும். நானும் பலமுறை நம்ம ஊர் மசாலா பொருட்களை தேடி அலைந்திருக்கிறேன். சக்தி மசாலா, ஆச்சி மசாலா போன்ற நம்ம ஊர் மசாலாக்கள், நம்ம ஊர் ஊறுகாய்கள் போன்றவவை பெரிதாக கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது வைக்கப்பட்டிருக்கும் இடம் பெரும்பாலும் எளிதாக பார்வையில் படாதபடி, தேடிப்போயோ அல்லது அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டோ அதை வாங்குவது போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

நம்ம ஊர் ஸ்டைல் சாம்பார், ரசப்பொடிகள் கேரள தயாரிப்பான ‘மலபார்’ பிராண்டுகளில் வாங்கி பயன்படுத்தினாலும் அது நம்மவர்களுக்கு திருப்தியை தருவதில்லை. அதனால் சமீபமாக ஓரிரு ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் தேவையால் நம்ம ஊர் ஆச்சி மசாலா போன்றவைகள் இங்கு அதிகம் கிடைத்தன. மலபார் பிராண்டு மசாலாக்களின் விற்பனையில் இது சரிவை ஏற்படுத்தியது.

தமிழகத்தைவிட கேரளாவில் விவசாயம் மிக குறைவு. அங்குள்ள மசாலா கம்பெனிகளுக்கான மூலப்பொருட்களை தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்தான் வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் அதிகம் வாங்குகிறார்கள்.

கேரள பிராண்டு மசாலா கம்பெனிகளுக்கு மட்டும் பூச்சி மருந்து அடிக்காமல் நம்ம ஊர் விவசாயிகள் விவசாயம் செய்து கொடுப்பதில்லை. ஆனால் தடை விதித்தது மட்டும் தமிழகத்தை சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு என்பதில்தான் கேரளாவின் கார்ப்பரேட் அரசியல் உள்ளது.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நம்ம ஊர் இட்லி, தோசை மாவிலும்கூட தான் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள் கேரளைட்டுகள்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நம்ம ஊர் ‘சரவணா’ ‘தஞ்சாவூர்’ பிராண்டு இட்லி தோசை மாவுகள் கிடைக்கும். தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் இந்த இரு இட்லிதோசை மாவைதான் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

aachi chilli powder - Dhinasari Tamil

இதன் வர்த்தகத்தை பார்த்த ‘லூலு’ தானும் புதிதாக தன்னுடைய லூலு பிராண்டில் இட்லி தோசை மாவையும் விற்பனை செய்ய ஆரம்பித்தது. ‘மலபார்’ ‘நெல்லாரா’ போன்ற நிறைய மலையாள பிராண்டுகள் அடிமாட்டு விலைக்கு இட்லிதோசை மாவுகளை விற்பனை செய்து தமிழக பிராண்டுகளின் வர்த்தகத்தை உடைத்தன.

தஞ்சாவூர் பிராண்டு இட்லி மாவு 5 திர்ஹாம்ஸ் விற்றுக்கொண்டிருந்த நிலையில் வெறும் 3.50 திர்ஹாம்ஸ் விலையில் ‘நெல்லாரா’ என்ற மலையாள பிராண்டு மாவு விற்பனையில் இறங்கியது. தரமும் குறைவு, சுவையும் குறைவு, விலையும் குறைவு ஆனாலும் மார்க்கெட்டில் தமிழக பிராண்டுகளின் வர்த்தகத்தை பாதிக்கவே செய்தது.

தற்போது வேறு வழியில்லாததால் இவர்களோடு தாக்குப்பிடிக்க ‘சரவணா’ ‘தஞ்சாவூர்’ ‘ஐடி சென்னை’ போன்ற தமிழர் தயாரிப்புகள் 4 திர்ஹாம்ஸ் அளவிற்கு தங்கள் விலையை குறைத்துக்கொண்டு UAE மார்க்கெட்டில் மலையாள பிராண்டுகளோடு தாக்குப்பிடித்து வருகின்றன.

இந்த விவரங்கள் தெரிந்த என்னைப் போன்ற ஒருசிலர் எப்போதும் தமிழ் பிராண்டுகள் இருக்கும்போது விலை குறைவாக இருந்தாலும் ‘லூலு’ பிராண்டுகள், மலையாள பிராண்டுகளை வாங்குவதில்லை.

பெப்சி கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பிறகு நம்ம ஊர் கோலி சோடா, கலர் சோடாக்களின் குடிசைத்தொழிலை அழித்தொழித்ததுபோல கேரளாயிஸ்ட்டுகளின் வர்த்தக லாபிக்கு மயங்கி நம்ம ஊர் நிறுவனங்களை மூட நாமே வழி செய்துவிடக்கூடாது.

கேரளாவில் எப்போதும் நடப்பது இனம் சார்ந்த அரசியல் மற்றும் வர்த்தகம். அதை எப்போதும் நினைவில் வையுங்கள். முல்லை பெரியாறு பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது இடுக்கியில் உள்ள தமிழர்களை மலயாளிகள் தாக்கினர். அப்போது தமிழகத்தில் உள்ள ஜோய் ஆலுக்காஸ், மலபார் கோல்டுகளின் மீது கல் விழுந்தது.

இங்கு விழுந்த ‘கல்’ அங்குள்ள தமிழர்கள் மீது மேலும் விழவிருந்த தாக்குதலை நிறுத்தியது. இதுதான் நாம் எளிதாக புரிந்துகொள்ள வேண்டிய கேரளாயிஸ்ட் வகை கார்ப்ரேட் அரசியல். நியாயமாகவே தெரிகிறது!

நமக்கு ஐசக்கை பிடிக்காது….ஆனாலும் மலையாள லாபி மட்டும்தான் காரணம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

  • பாமரன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,156FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,517FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...