
- ஊரடங்கால் வறுமையின் விளிம்புக்கே சென்ற தனியார் ஆலய பணியாளர்கள்
- ஊரடங்கை நீட்டித்தால் வாழ்வாதாரம் பாதிக்கலாம்
மதுரை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீடித்தால், தனியார் வசம் உள்ள ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வறுமையின் விளிம்புக்கே சென்று விடுவார்கள் என, மதுரை வண்டியூரைச் சேர்ந்த த. குப்பு என்பவர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் அரசு ஆலயங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே மாதச் சம்பளம் இது வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமக் கோவில்கள் பூசாரிகளுக்கும், அறநிலையத்துறை உதவி ஆணையாளர்கள் மூலமாக ரூ. 1000 வழங்கப்பட்டதாம்.
ஆனால், தனியார் ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பணியாளர் களுக்கும் இதுவரை எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். பல கோயில்களில், தனியார் ஆலய நிர்வாகிகள், பணியாளர்கள் பலருக்கு சம்பளம் வழங்க இயலாது, நீங்கள் வேறு பணியை பார்த்துக் கொள்ளுங்கள் என, சொல்வதையும் கேட்க முடிந்தது.
அரசு ஊரடங்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நீட்டித்தால், தனியார் ஆலயப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார் தனியார் ஆலய பட்டர் த. குப்பு.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை