
பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, அண்மையில் பெரியார் சிலை குறித்து ஒரு கருத்தைச் சொல்லி, திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால், அரசியல் மட்டத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பு, இப்போது ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறித்து மீண்டும் ஒரு விரிந்த பார்வையை முன்வைக்க தமிழகத்தில் பலரையும் தூண்டியுள்ளது. இப்போது சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டதால், தாங்கள் கொடுப்பது தான் செய்தி, தாங்கள் சொல்வதுதான் உண்மை என்ற ஊடகங்களின் எதேச்சாதிகாரப் போக்கும் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பெரியார் என்ற பெயரை ஒரு சாரார் தமிழகத்தின் ’அரசியல் வர்த்தக அடையாளப் பெயர்’ ஆக்கி வரும்போது, பழங்கால நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்டவர்கள் இதன் மறுபக்கத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவராக தமிழர்கள் இருப்பதால், இந்தக் கருத்துக்களும் இப்போது பலமாக வலம் வரத் துவங்கியுள்ளது. அப்படி சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வரும் கருத்து இது..
***
திராவிட கழகத்தினர் இந்து மதத்தின் மேல் செய்த அடாவடிகளும், அயோக்கியதனங்களும், அவதூறுகளும்!
1. நடிகர் சிவாஜி தன் நண்பர் சொல்கேட்டு இந்து மத பெருமாள் கோவில் இருக்குமிடமான திருப்பதிக்கு சென்று திரும்பியபோது இந்து கோவிலுக்கு சென்றதினால் திராவிட கழகத்தினர் வழிநெடுக “திருப்பதி கணேசா, கோவிந்தா” என கேலி செய்து எழுதியிருந்தனர், அவர் காரில் கல் எறிந்தனர், அவரின் படப்போஸ்டர்களில் சாணி அடித்தனர்
2. அதேபோல் இந்து மத பெரியோர் ஆன்மிகளாருமான செல்வாக்கு பெற்றுக்கொண்டிருந்த “கிருபானனந்த வாரியாரை” அவர் தோற்றத்தை கொண்டு “கிருபானந்த லாரியார்” என கிண்டல் செய்து அழைத்தவர்கள்தான் இந்த திராவிட கழகத்தார்.
3. பின்னாளில், கிருபானந்த வாரியார் நெய்வேலியில் நடந்த சொற்பொழிவில் “ஊழ்” பற்றி பேசியதை, அமெரிக்காவில் இறந்த அண்ணாவின் இறப்பை சாடி பேசினார் என வதந்தி கிளப்பியதோடு அவர் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவர் வழிபட்ட முருகன் விக்கிரகத்தை வீசி எறிந்து உடைத்தனர். நல்லவேளையாக காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வாரியார் அங்கிருந்து வெளியேறி வேறிடத்திற்குச் சென்றார்.
4. 2006ல் சமணதுறவிகள் தங்கள் உலக அமைதிக்காக சமய யாத்திரை சென்றனர் அப்பொழுது தமிழகம் வந்து கர்நாடகம் திரும்பினர். அவர்கள் கோட்பாட்டின் படி “நிர்வாணமாக” இருப்பர். 5 பேர் கொண்ட குழுவாக இருந்தவர்கள் பகல் நேரங்களில் செல்லாமல் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் இரவு நேரங்களில் நடை பயணம் செய்தவர்களை தர்மபுரி அருகே வழிமறைத்து முற்றுகையிட்டு பிரச்சனை செய்து நக்கல் செய்து அவர்களை கதிகலங்க செய்து கர்நாடகாவுக்கு அனுப்பியவர்கள் திராவிட கழகத்தார்கள்
5. 2012ல் திராவிட கழகத்தார், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’, ‘நெற்றியில் திருநீறு… புத்தியில் கோளாறு’, ‘எங்களுக்கு இல்லை இந்துக்களின் ரத்தம்” என்று கோஷமிட்டு கூடவே “நாங்கள் எந்த விரதமும் இருக்கல. சிக்கன், மட்டன் சாப்பிட்டுட்டுதான் அலகு குத்தினோம்” என பிரசாரம் செய்து “சமூகத்தைச் சீர்திருத்தவே இப்படிச் செய்கிறோம்” என்று கூறினர். ஆனால் இவர்கள் என்றும் மாற்று மத நம்பிக்கைகளை பற்றி அவர்கள் இடங்களில் ஒரு கோஷமும் எழுப்பியதில்லை.
6. ரம்ஜான் நோன்பு விழாவில் ஒரு முறை கருணாநிதி பேசுகின்றபோது, ‘முஸ்ஸீம்களாகிய நீங்கள் இருப்பது நோன்பு, இந்துக்கள் செய்வது வம்பு’ என்று பேசினார். முஸ்ஸீம் சமுதாயக் கூட்டத்தில் போய் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காலத்திலிருந்தே திமுக-வில் நிலவி வந்த போக்கு இது.
7.அரசியல் முனிவர் என கருதப்படும் பி.சி கணேசன் அவர்களின் அனுபவத்தில் சொல்லியது “அண்ணா பேசவிருந்ந்த பொறையார் கூட்டத்தில் போய் நான் அமர்ந்தேன். கூட்டத்திற்கு அண்ணா வருவதற்குக் காலதாமதமாயிற்று. நாகூர் ஹனீஃபா, இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ஒரு பாட்டில் இந்துக் கடவுள்களான விநாயகர், முருகன் ஆகியோரைக் கேவலமாக வர்ணித்துப் பாடியதுடன் அந்தக் கடவுள்களை வழிபடுகின்ற இந்துக்களைப் ‘பொச கெட்டப் பசங்களா’ எனக் கேலிசெய்தும் பாடினார். கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. பிறகு வந்த அண்ணா பேசிய பிறகு கூட்டத்தில் நாகூர் ஹனிஃபா இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பாடியதைப் பற்றிச் சொல்லிவிட்டு மூடநம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு முஸ்ஸீம், இந்துமதத்தைப் பற்றி மட்டும் இழிவாய் பாடுவது என்ன நியாயம்? வேண்டுமானால், ஹனிஃபா இஸ்லாமிய மதத்திலுள்ள பிற்போக்கான கோட்பாடுகளைப் பற்றிப் பாடலாமே என சற்றுக் காரசாரமாகவே கேட்டேன். அதற்க்கு அண்ணா புன்முறுவலுடன் ஹனீஃபாவைப் பார்த்து, ’கணேசன் எனக்குச் சொல்லவில்லை, உனக்குத்தான் சொல்கிறார்’ எனச் சொல்லி, அவருக்கே உரிய ராஜதந்திரத்துடன் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
8. முஸ்லீம் மாநாட்டில் அன்று திரு.கருணாநிதி கூறியது, “இந்தியன் என்றால் ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம். அது என்ன இந்து? (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) இந்து என்றால் அரபு மொழியில் திருடன் என்று அர்த்தம்.”
9. வல்லபை விநாயகர் பற்றி ஒரு தவறான விஷமக்கருத்து கொண்ட கட்டுரையை 1928ல் பெரியார் எழுதினார். அதற்கு எந்த ஒரு ஆதாரமும் அதில் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் அதை மிக சமீபத்தில் தற்போதைய தலைவர் வீரமணி இக்கட்டுரையை சீர்காழியில் நடந்த சொற்பொழிவில் கூறினார். ஆதாரமே இல்லாமல் பேசும் இவர்கள் தான் பகுத்தறிவாதிகள் என இந்து மத அவதூறு செய்வது.
10. கடைசியாக 2006ல் நடந்த பெரியார் சிலை சம்பவம்:
மதசார்பின்மை என்று பெருமை பேசுபவர்கள் திராவிட கழகத்தார் செய்த இந்து மதத்தின் மீதான் அடாவடித்தனம் பெரியார் சிலையை கோபுரம் எதிரே வைத்தது. ஶ்ரீரங்கத்தில் திகவினர் விசமத்தனமாக, ஶ்ரீரங்கநாதர் கோவில் எதிரில், ஶ்ரீசைத்தன்யர் பாதக்கோவிலின் அருகில் பெரியார் சிலையை வைத்தனர். அப்போதே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது, ஆனால், ஆட்சியுள்ளவர்களின் ஆதரவால் அச்செயல் நிறைவேரியது. எதிர்ப்பு தெரிவித்தவர்களினால் டிசம்பர் 2006ல் அச்சிலை சேதப்படுத்தப் பட்டது. பகுத்தறிவு பேசுபவர்க்ள் இது வெறும் சிலைதானே என இன்னொன்று வைத்திருக்க வேண்டும். ஆனால் அது தனக்கு வந்த இழுக்காக நினைத்து இவர்கள் செய்த காரியம் பல, அவை,
i) திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம்உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்புப் போராட்டத்தில்குதித்தன
மேலும், ராமர் படங்களுக்கு தீ வைத்து எரித்தும் தங்களது எதிர்ப்புகளைக்காட்டினார்.
ii) சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் ஆசிட் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலைதூக்கி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம் மீது ஆசீட் வீசப்பட்டது. அதோடு,இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் மண்டபம் முன்பு இருந்த சாமி சிலைமீது வீசி எறிந்தனர்
iii) கோவில் மேல் குண்டு விசியதோடு இல்லாமல் பின்னர் அந்தக் கும்பல் கோவில் வாசலில் பூணூல், தர்ப்பைப் புல் உள்ளிட்ட பூஜைபொருட்களை விற்பனை செய்யம் தண்டபாணி என்பவரை உருட்டுக் கட்டையால்தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதேபோல பூக்கடையில் இருந்த முரளிஎன்பவரையும் அக்கும்பல் தாக்கியது. அவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
iv) விழுப்புரத்தில் சங்கராபுரம் கோவிலில் கருங்கல் விநாயகர் விக்கிரகம் பெர்த்தெடுக்கப்பட்டு, உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, வாகனம் மூஞ்சூறு மற்றும் பீடமும் உடைக்கப்படிருந்தன. கோவில் சுற்றுப்புறச் சுவர்களில் இருந்த சிற்பங்களும் உடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, கோபுரத்தில் இருந்த சிலைகளும் உடைக்கப்பட்டன
v) சங்கரபுரம்-கல்லக்குறிச்சி சாலையில், விவசாய சந்தை கமிட்டி அருகில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த விநாயகர் விக்கிரகமும், அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்தது.
vi) காரணமே இல்லாமல் சேலத்தில் உள்ள சங்கரமடத்தில் நுழைந்து, எல்லா சாமி படங்களையும் அடித்து உடைத்தனர்.
vii) அதேபோல, சம்பந்தமே இல்லாமல், ஈரோட்டில், அக்ரஹாரத் தெருவில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில் 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அங்கு வந்தது. கோவிலுக்குள்புகுந்த அவர்கள் தடுத்து நிறுத்திய பூசாரியை பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டிதள்ளி விட்டு கோவிலுக்குள் புகுந்தனர். அப்போது இன்னொரு பூசாரி நரசிம்மன் ஓடிவந்து அவர்களைத் தடுக்க முயன்றார். அவரையும் அக்கும்பல் அடித்துத் தள்ளியது.பின்னர் ராகவேந்திரர் சன்னதிக்குள் புகுந்து அங்கிருந்த பூஜை பொருட்களைவெளியே தூக்கி வீசினர். ராமர் விக்கிரகத்தைப் பெயர்த்து எறிந்தனர். கோவிலுக்கு அருகே கடை வைத்துள்ளபத்ரிநாராயணனையும் அக்கும்பல் தாக்கியது. அவரது கடையையும் அக்கும்பல்சூறையாடியது.
viii) ஓசூர் காந்தி சிலை அருகே ராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டஅவர்கள் ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். அதற்கு தீயும் இட்டுகொளுத்தினர்.
ix) இதோடு கோவில் அருகே வாழும் பூசை செய்பவர்களின் குடுமி அறுப்பு, அவர்களின் பொருட்களை உடைத்தல், பூணூல்களை அறுத்தல் என்பது எப்பவும் போல் நடத்தப்பட்டது.
இவை அனைத்தும் வெறுமனே ஆரிய எதிர்ப்புகாக நடத்தபட்ட வன்முறை அல்ல அனைத்து இந்துக்களுக்கும் எதிராக நடத்தப்பட்டது. அங்கே பூ விற்பவர்களும், தர்பைப்புல் விற்றவர்களும், கடை வைத்திருந்தவர்களும் சாதாரண இந்துக்கள். திராவிடகழகத்தினர் ஆரியரை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இங்கே அனைத்து இந்துக்களை துன்புறுத்தவும் துணிந்துள்ளனர் ஆனால் வெளியில் பிராமணியத்தை மட்டுமே எதிர்ப்பதாக கூறிக்கொள்கின்றனர்.
இவர்களின் அட்டுழியங்களின் உண்மை நிலையை கூறவே இந்த பதிவு. இவர்களுக்கு தேவை இந்துக்கள் அடிமையாகவே இருக்கவேண்டும், எதை செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவே. மீறினாலோ, எதிர்த்து கேள்வி எழுப்பினாலோ ஆரியத்தை எதிர்ப்பதாக கூறி தமிழர்களான நாம்தான் ஆரியர் என அழிப்பர்.
[ஆதாரம்: திராவிடமாயை, வேதபிரகாஷ் இணையதளம், ஒன் இன்டியா,விகடன், tamilnadutalk ]



