
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத உணர்வை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே இசைஞானி பேசியது தவறு, அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார்.
இன்னைக்கிதான் இப்படி ஒரு சட்டம் போட்டாங்களா, இல்லே, இப்பதான் இப்படி ஒரு சட்டம் இருக்குன்னு தெரியுமா.
தாயார் ஆண்டாளை தகரமுத்து தரக்குறைவா விமரிசித்தபோது இந்த சட்டம் இல்லையா, இந்து மத தெய்வங்களை, வழிபாட்டுத்தலங்களை, வழிபடுமுறைகளை மற்றமதத்தினர், நாத்திகவாதி என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, நடுநிலையாளர் என்ற தோலை போர்த்திக் கொண்டு போலி மதசார்பாளர்கள் தரக்குறைவாக விமரிசித்து, சேதப்படுத்துவது, போன்ற செயல்களை செய்துகொண்டிருந்தபோது எங்கேயா போனீங்க நீங்க எல்லாரும் ?
ஆமா, வெளிநாட்டு அறிஞரது ஆய்வுக்கட்டுரையைத்தான் மேற்கோள் காட்டினார் என்று நிறையபேர் முட்டுக்கொடுத்தாங்களே, இசைஞானி மட்டும் என்ன செஞ்சாரு? யூடுபுல இப்படி ஒரு செய்தி இருக்குன்னு தெளிவா மேற்கோள் மட்டும்தானே காட்டினார்? அதுக்கு ஏன் இவ்ளோ பொங்குறீங்க ?
எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா, ரத்தம்ன்னு வெளிப்படையா தெரியுது. கொண்டையை மறைங்கய்யா.
மன்னிப்புக்கேள், மன்னிப்புக்கேள், தகரமுத்துவே, தாயார் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னிப்பு கேள்



