
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப் படும் நீயா நானா என்ற டாக் ஷோ..வை விரும்பிப் பார்ப்பவர்கள் பலர். ஆனால், அதில் ஒரு சார்பான கருத்துகளே முன் வைக்கப்படுகின்றன என்று அங்கலாய்க்கிறார்கள் பார்வையாளர்கள்.
ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்ப்ரஷன் என்று, பேச்சு சுதந்திரம் என கொட்டை எழுத்தில் லோகோவுக்குக் கீழே போட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன பேச வேண்டும் என நினைக்கிறார்களோ அதைத்தான் பார்வையாளர்கள் பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அவர்களாக தனிப்பட்ட கருத்துகளை சொன்னாலும் அவை எடிட் செய்யப் பட்டு இருட்டடிப்பு ஆகின்றன என்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் லோகோவும் கூட, ரயில்களில் கடைசிப் பெட்டியில் மோதி விடாமல் இருப்பதற்காக வரையப்பட்டுள்ள, பார்ப்பதற்கு X- என்ற எதிர்ப்பு மார்க்-உடன் தான் போடப்பட்டுள்ளது. எனவே, நீயா நானாவை வேண்டாம் என்று தவிர்க்க வேண்டுமென்பதாக அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே போடும் போது, நாம் ஏன் அதை விழுந்து விழுந்து பார்க்க வேண்டும் என்று கிண்டல் செய்கிறார்கள் சமூக ஊடகங்களில்!
நிகழ்ச்சியை இயக்கும் ஆண்டனி, கிறிஸ்துவ மத பிரசாரத்துக்கு அந்த டிவி.,நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு ஏற்ப, இந்து மதத்தை சீண்டிப் பார்க்கும் தலைப்புகளில்தான் இதுவரை விஜய் டிவி.,யில் நீயா நானா நிகழ்ச்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றனவே தவிர, கிறிஸ்துவ மதத்தை கேள்வி கேட்கும் விதமாக இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தியதில்லை என்று கோடிட்டுக் காட்டுகிறார்கள் பார்வையாளர்கள்.
இப்போது சாதி ரீதியில் இந்துக்களை மீண்டும் மீண்டும் இழிவு செய்து பிளவுபடுத்தும் கிறிஸ்துவ மிஷனரிகளின் அஜெண்டாவை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் நீயா நானா படக் குழுவினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிலரே சமூக ஊடகங்களில், நிகழ்ச்சியின் பின்னணியில் நிகழும் கோல்மால்களை, குள்ளநரித் தந்திரங்களை புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.
அப்படி வெளிவந்த ஒரு கருத்தில், சாதி ரீதியாக பிரச்னை ஏற்படுத்துவதற்கென்றே தலைப்பை கொடுத்து பேச வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களில் ஒருவர் வெளியிட்ட கருத்து இது….
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் போடுவது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன்…
அங்கே நடந்த விவாதத்தில் முழுக்க முழக்க இந்து மதத்திற்கு எதிரான மற்றும் இந்துகளை பிரித்து மதமாற்றும் சூழ்ச்சியே அரங்கேறியது…
ஒரு தரப்பில் அறியாத இளைஞர் கூட்டமும், மறுபுறம் திராவிட.கழக நபர்கள், சிறுபான்மையினர் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற சதிகார கூட்டமும் பேச வைக்கப்பட்டனர்…
எங்களிடம் பெயர் கேட்ட கோபிநாத் எதிர்தரப்பில் யாரிடமும் பெயர்கூட கேட்க வில்லை… ஏன் என்றால் பெயரிலேயே அவர்கள் யாரென்று தெரிந்துவிடும் என்பதால் தான்.. அங்கே சம்பந்தமே இல்லாமல் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மாட்டுகறி உண்பதை பற்றியும், இந்து மதத்தையும், இந்து அமைப்புகளையும் பற்றியும் அவதூறாக பேசினார்…
இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.. இதில் மிக பெரிய சதி கோபிநாத்தின் சுய சிந்தனையில் அங்கே கேள்விகள் எழுப்பப் படவில்லை….
அங்கே இயக்குனர் ஆண்டனி மற்றும் பத்துபேர் கொண்ட குழு மைக்ரோ போன் மூலம் கொடுக்கும் தகவலை கேட்பது மட்டுமே கோபிநாத்தின் வேலையாக இருந்தது..
இங்கே ஒரு சவாலை நான் கோபிநாத்திற்கு வைக்கின்றேன்… காதில் மைக்ரோ போன் இல்லாமல் விவாதத்தில் தொகுத்து வழங்க தயாரா?
கருத்து: Rajeshwari Shastry



