காவிரிக்காக கடையடைப்பு போராட்டங்களை பல்வேறு அமைப்பினரும் அறிவித்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடையடைப்பு என்பதன் மாறுபட்ட பார்வையை முன்வைக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில். அப்படி ஒரு வித்தியாசமான பார்வை இது….
***
3’ம் தேதி கடையடைப்பு… – விக்கிரமராஜா.
5’ம் தேதி, கடையடைப்பு… –
ஸ்டாலின்
11″ம் தேதி கடையடைப்பு…-
வெள்ளையன்…
அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல் மற்றும் கடையடைப்பு
இன்னும் பல லட்டர் பேடு அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.
கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?
கடையே இல்லாத டீலக்ஸ் வணிகர்களே … தலைவர்களே … சாதா வணிகர்கள் எங்களை கடை அடைக்க சொல்கிறீர்களே இது நியாயமா?
நாங்கள் வாங்கிய கந்து வட்டி பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?
நாங்கள் கடையை அடைத்துப் போராட தயார் ஸ்டாலின் அவர்களே! நீங்கள் கலைஞர், சன் டிவிகளின் ஒலிபரப்பை ஒரு நாள் மட்டும் நிறுத்துவீர்களா?
கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத நிலையில் கடைக்கு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?
பேசாம கடையை பூட்டிட்டு வேற வேலை பார்க்கலாம்.
(வணிகர்களின் நிலை)




