கோயிலில் பூஜை நேரத்தின் போது நாகஸ்வரமும் தவிலும் இணைந்து இசைக்கும் போது மனம் பூஜையில் லயிக்கும்.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வேலை பார்த்த நாகஸ்வர வித்வான் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். அதன் பின் இன்று வரை நாகஸ்வர வித்வான் நியமிக்கப்படவில்லை. இதனால் பூஜையின் போது டும் டும் டும் டும் என தவில் காரர் இசைக்கும் தவில் சத்தம் மட்டுமே ஒலிக்கிறது.
கோயில் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஒரு நாகஸ்வர வித்வானை நியமிக்க எண்ணமில்லாமல் இருப்பது வேதனையைத் தருகிறது.
14 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் திருப்பணியும் இன்னும் முடிந்தபாடில்லை. கோயிலுக்கு நிம்மதி வேண்டி சாமி கும்பிடச் சென்றால் கோயிலின் நிலை பார்த்து நெஞ்சம் வருத்தமடைகிறது. பகவானே நீ விஸ்வரூபம் எடுக்கும் நாள் எந்நாளோ?
– திருவட்டாறு சிந்துகுமார்




