பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஏரிக்கரைக் கவியரங்கம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
பேரூர்த் தமிழ் மன்றம் மற்றும் கோவை முத்தமிழ் அரங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரு, அல்சூர் ஏரி எதிரில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 299-ஆவது ஏரிக்கரைக் கவியரங்கம் நடக்கவிருக்கிறது.
“தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’ என்ற தலைப்பிலான கவியரங்கிற்கு வே.கல்யாண்குமார் தலைமை தாங்குகிறார். பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், பேரூர்த் தமிழ் மன்றச் செயலாளர் இ.இரவி, கோவை முத்தமிழ் அரங்கத் தலைவர் இரா.சொ.இராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கவியரங்கப் பொறுப்பாளர் கே.ஜி.ராஜேந்திரபாபு அறிமுக உரை ஆற்றுகிறார். மூன்று தமிழ் அமைப்புகளை சார்ந்த கவிஞர்கள் கவிதைப்பாடவிருக்கிறாரக்ள். முன்னதாக, அமுதபாண்டியன் வரவேற்புரையாற்ற, கொ.சி.சேகர் நன்றி தெரிவிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



