அன்பார்ந்த ஆசிரியர்க்கு, வணக்கம்…
சென்னை, மண்டலம்-14, வார்டு 188, மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்புக்கு அருகில் 8வது குறுக்குச் சாலையில் உள்ள திறந்தவெளி பூங்கா, சென்னை பெருநகர மாநகராட்சியினரால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல முறை திறந்தவெளி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட ஏறக்குறைய 5 ஆண்டுகளாக மறுத்து வருகின்றனர்.
மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்போர் நலச்சங்கம் 26-5-17, 5-8-2017, 17-5-18,கடிதம் மூலம் அனுமதிக்க வேண்டிகோரப்பட்டது. மேலும் 6-8-2018 அன்று சங்கத்தினர், கருத்துரையை அறியவும், தெரிவிக்கவும் நாளும் தேதியும் நேரத்தையும் தெரிவிக்க பதிவு அஞ்சல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வருவாய்த்துறையினர் 30-4-2018 தேதியிட்ட கடிதம் மூலம் திறந்தவெளி பூங்காவின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இதுநாள்வரை மாநகராட்சி நிர்வாகம் துரும்பு அளவு கூட அசையாமல் திறந்தவெளி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
எனவே இந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, சுதந்திர நாளன்று இப்பகுதி குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்களுக்கு பூங்காவை பயன்படுத்தி போட்டிகள் வைத்து மகிழவைக்கவும் முயன்று வருகிறோம். தங்களின் முயற்சியால் மடிப்பாக்கம் 8வது குறுக்குத் தெருவில் உள்ள திறந்தவெளி பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி
கோ.கிருட்டினமூர்த்தி
செயலாளர்
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு குடியிருப்போர் நலச்சங்கம், பதிவு எண்.649/2017
Update today news