ஈவேரா பெரியார் தான் தமிழகத்தில் சாதியை ஒழித்தார்; ஈவேரா இல்லை என்றால் ஆதிக்க சாதியினரால் தமிழர்கள் அடிமைப் பட்டு இருப்போம் என்று சொல்லி சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய , சாதி ஒழிப்பு நாயகர் என்று குறிப்பிட்டு பல்வேறு தளங்களில் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாத எழுத்தாளர் பெயரில் தினம் தினம் சாதிவெறி கருத்துக்களை பேசிவரும் திரு மதிமாறன் என்பவரின் சமீபத்திய கண்டுபிடிப்பு கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் .
தோசை சுடுவது எப்படி?… – என்று வகுப்பு எடுப்பது போல தோசைக்கு சாதி சாயம் பூசிய சாதி ஒழிப்பு போராளி மதிமாறன் சரி ஒரு உணவு இந்த உணவில் எங்க சாதி வந்தது அவர் சொல்லுகிறார் நைஸ் தோசை சாப்பிடுபவர்கள் பார்ப்பனர்கள்.
ஊத்தாப்பம் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் கல் தோசை என்று சொல்வார்கள்! இது எல்லாம் சாதாரண சாதியினர் சாப்பிடக்கூடியது என்று சொல்லுகிறார் .
தோசை சாதி கண்டுபிடித்த மிகப்பெரிய அறிவாளி… அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள்.
கேள்வி1 : நைஸ் தோசை பார்ப்பனர்களுக்கு சாதா தோசை மற்றவர்களுக்கு அப்படியானால் ஆனியன் தோசை முட்டை தோசை எல்லாம் எந்த சாதியினருக்கு என்று இவரிடம் இனிமேல் கேட்க வேண்டும்?
கேள்வி 2: இட்லி மல்லிப்பூ இட்லி குஷ்பூ இட்லி ரவா இட்லி இவை எல்லாம் என்ன ஜாதி
கேள்வி 3 : ரவா தோசை ஆனியன் தோசை கீரை தோசை மசால் தோசை இவையெல்லாம் எந்த சாதி பட்டியலில் வருகிறது
கேள்வி 4 : உளுந்த வடை பருப்பு வடை கீரை வடை ஆமவடை இது பட்டியல் சார் இது என்ன சாதி பிரியாணி சாதா , குஸ்கா halal பிரியாணி இவையெல்லாம் என்ன ஜாதி
கேள்வி 5 fried rice என்று சொல்லும் வறுத்த சோறு உணவு என்ன சாதி?
இப்படி உணவு வகைகளுக்கு எல்லாம் சாதி பட்டியல் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி: பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பேரன் 9 அறிவு நாயகன் திருமதி மாறன்
இதுபோன்று ஒரு பகுத்தறிவாளி மிகப்பெரிய அறிவார்ந்த வாதத்தை முன் வைத்தார்… என்னவென்றால் தோசை ஏன் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது?
அந்த பையன் சொன்னான்… தோசை ஓட்டை ஓட்டையாக இருப்பதற்கு காரணம் தோசை சுடுவது! அதனால் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது என்று சொன்னான் .
மேலும் கேள்வி கேட்டான் தோசையை ஏன் திருப்பி போடுகிறோம்? அதற்கு அந்தப் பையன் சொன்னானாம் – தோசையை திருப்பிப் போட முடியாது சார் அதனால்தான் தோசையை திருப்பி போடுகிறோம் என்று சொன்னான்.
மதிமாறனின் தோசைக்கு சாதி சான்றிதழ் வாங்க அரிய கண்டுபிடிப்பு கண்டு பிடித்ததால் அவரது பேச்சைக் கேட்டு எதனால் சிரிப்பது என்று தெரியவில்லை.
மதிமாறனின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால் க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும் நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா என்பது போல் இருக்கிறது! நாத்திகனாக இருந்து ஆத்திகனாக நிறைவு நாள் வரை வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன் சொல்லுகிறார் … நான் உணவகங்களில் சாப்பிட போனால் தோசை எப்படி இருக்கிறது என்று தான் சாப்பிட வேண்டும்! நன்றாக இருக்கிறதா சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்… அதை விட்டுவிட்டு சமையலறையில் சென்றால் அந்த விளக்கத்தை வைத்துக் கொண்டுதான் தோசை சட்டியை சுத்தம் செய்வார் என்று சொல்லுவார்
அதுபோல உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு அதில் சாதி ஆராய்ச்சி செய்வது பகுத்தறிவு என்றால் அந்த பகுத்தறிவு எதற்கு சமம்
செட்டிநாட்டு உணவிலேயே தோசையும் இருக்கிறதுதானே! இல்லை என்றால் எங்கள் அய்யா சுபவீ கோபித்துக் கொள்ளப் போகிறார் ஐயா? நண்பரே இந்த தயிர் வடை எல்லாம் என்ன ஜாதி கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் பதிலுக்காக காத்திருக்கிறேன்!
ரொம்ப கேள்வி கேட்டேன் நண்பர் மதிமாறனுக்கு இரண்டு கல்லு பார்சல் … அட ஊத்தாப்பத்தை சொன்னேன் கல் தோசையை சொன்னேன்..!
இராம. இரவிக்குமார்
(பொதுச் செயலர், இந்து மக்கள் கட்சி)




