இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமர் ஆக பதவி ஏற்றுள்ளார்.
தலைநகர் கொழும்பில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா முன்னிலையில், ராஜபக்சே பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் ஸ்ரீ சேனா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.



