Homeஉலகம்அதிபராக இருந்தவர்... பிரதமர் ஆனார்! கூட்டணிப் பிளவால்.. ஆட்சியில் ராஜபட்ச!

அதிபராக இருந்தவர்… பிரதமர் ஆனார்! கூட்டணிப் பிளவால்.. ஆட்சியில் ராஜபட்ச!

Mahinda Rajapaksa Sworn In As Sri Lankas New Prime Minister - Dhinasari Tamil

கொழும்பு: ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து இலங்கை பிரதமராகப் பதவி ஏற்றார் மகிந்த ராஜபட்ச. இலங்கை அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு திருப்பமாக, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபட்ச பதவி ஏற்றார்.

இலங்கையில் 2015 இல் நடைபெற்ற தேர்தல் ராஜபட்சவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்ரீபால சிறீசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. சிறீசேன அதிபராகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில், அண்மைக் காலமாகவே அதிபர், பிரதமர் இருவருக்கும் இடையில் பிணக்குகள் அதிகரித்தன. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது இந்தக் கூட்டாட்சியில் அங்கம் வகித்த மகிந்த ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு!

ரணில் தலைமையிலான அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அரசில் இருந்து வெளியேறுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மகிந்த அமரவீர வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் எழுத்து மூலம் வாபஸ் பெறும் கடிதத்தைக் கொடுத்து விட்டதாக அமரவீர தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கை புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறீசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவ.5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அதில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இலங்கை அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியல் அமைப்பு சட்டம் 19ஆவது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் விக்ரமசிங்க கட்சியினர் கூறுகின்றனர். வாபஸ் பெற்ற காரணத்தாலேயே பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறியாமல், பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறுவதால், இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. மேலும், அதிபர் சிறீசேன முடிவுக்கு இலங்கை அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இலங்கையில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,496FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...