இடதுசாரி புத்திசாலித்தனம்?! பிணராயி விஜயன்.. ஐயப்பனுக்கு பூஜை செய்யும் தந்திரி பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று கலாய்த்திருக்கிறாராமாம்..
அவர்கள் பூஜை காலங்களில் பிரம்மச்சர்யத்தைதான் கடைப்பிடிக்கிறார்கள்.. கோயிலிலேயே தங்கி பூஜை முடிந்தபின் தான்.. போவார்கள்.. அது நாள் வரை நியமமாக இருக்க வேண்டும்..
அதுசரி.. கிருஷ்ணன் கோயிலில், முருகன் கோயிலில் இரண்டு பெண்டாட்டிக்காரன் தான் பூஜை செய்ய வேண்டும் என்பாரா?
சிவன் கோயிலில் பூஜை செய்பவர் விஷத்தை குடித்து கண்டத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பிதற்றுவாரா?
இதனை சொல்ல இந்த ஆளுக்கு என்ன தகுதி? ஆர்.எஸ்.எஸ். இளைஞர் கொன்ற வழக்கில் பிணராயி விஜயன் குற்றவாளியாக இருக்கும்போது.. சட்டத்தை இயற்றவும், மாற்றவும் இருக்கும் உயரிய பதவியில் இருக்க இவருக்கு என்ன தகுதியிருக்கிறது..
கேட்கிறவன் கேனயன் என்றால்… எது வேண்டுமானாலும் பேசுவார்கள்..
காம்ரேட் அந்தக்காலம் மலையேறிவிட்டது.. போட்டாவுடன் திருப்பி ஆயிரம் கேள்விகள் தாக்கும்..
ஓண்ட கட்சிக்காரன் கைத்தட்டலாம்.. மக்கள் காம்ரேட்கள் தலையில்தட்டி உட்கார வைக்கும் காலம் இது!
- பசுத்தாய் கணேசன்




