லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வராக உள்ளார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது பாஜக., அடிப்பொடிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் தேடலில் அதிகம் தேடப்படும் பிரபலஸ்தர்கள் குறித்து அந்நிறுவனம் அவ்வப்போது விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கூகுள் இந்தியா தேடலில், முன்னாள் இந்நாள் முதல்வர்களில் அதிகம் தேடப்பட்டவராக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போதான முக்கியப் பேச்சாளராக யோகி ஆதித்யநாத் இடம் பெறுவார் என அண்மையில் பாஜக.,வின் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் இணையத்தில் அதிகம் தேடப்படும் பிரபலஸ்தராக இருப்பதாகவும், யோகியைத் தேடியவர்களின் எண்ணிக்கை இதன் மூலம் உயர்ந்ததாகவும் கூகுள் அறிவித்துள்ளது. இது, பாஜக.,வினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




