December 5, 2025, 7:19 PM
26.7 C
Chennai

தமிழே போதுமே! ஆங்கிலம் நமக்கெதற்கு?

English Vinglish shooting 02 - 2025

மும்மொழித் திட்டமா? இருமொழித் திட்டமா?… என்ற விவாதமே தமிழகத்துக்குத் தேவையற்றது!

ஏன் ஆங்கிலம் மட்டும் பயில வேண்டும்? அன்னைத் தமிழ் இருக்க ஆங்கிலம் ஏன்? INSERTION – உட்செலுத்துதல், நுழைத்தல் – என்பதையே ‘இன்செர்சன்’- என்றுதான் ‘தமிலில்’ எழுதிப் படிக்கிறான் இன்றைய மாணவன்!

ஆங்கிலமும் இவனுக்கு சிரமம்தான். எனவே ‘ஒரு மொழித் திட்டம்’ போதும்! தாய்மொழியாம் தமிழிலேயே இவன் படிப்பான்!

‘தானியங்கிப் பொறியியல்’- (Automobile Engineering) அல்லது ‘இயந்திரப் பொறியியல்’ (Mechanical Engineering) பாடம்….

ஒரு ஈருருளி (டூ வீலர்) இயங்குவதற்கு, முடுக்கி (Accelerator), ஒடுக்கி (Clutch), விசைப்பொறி(Gear), தடுப்பான்(Brake),எரியூட்டி (Spark Plug), எரிபொருட் கலவையகம் (கார்பரேட்டர்), துடிப்பான்(பிஸ்டன்)… போன்றவை இன்றியமையாதவை!

விசைப்பொறிப் பெட்டி எண்ணை (Gear Box Oil), பொறி எண்ணை(Engine oil) சில இடங்களில் தடுப்பான் எண்ணை(Brake oil) ஆகிய திரவ நெகிழ்விகள் (Lubricants) ஈருருளியின் சீரான இயக்கத்துக்கு உதவும்.

மேலும் ஒடுக்கியின் கைப்பிடி, முன்சக்கர தடுப்பானின் கைப்பிடி ஆகியவற்றில் பிசுப்பு நெகிழ்வி (க்ரீஸ்) அவ்வப்போது தடவப்பட்டால் பிடித்தலும், விடுதலும் இலகுவாகும். சகடச் சங்கிலிக்கும் இணப்பு அறுவுறாவண்ணம் இளகவைக்கும் பிசுப்பு நெகிழ்வி உண்டு!

உதை உந்தி (kick starter) பொருத்தப்பட்ட ஈருருளிகளும் உண்டு; பொறி உந்தி (switch starter) உள்ள ஈருருளியும் உண்டு. பொத்தான் உந்தி (button starter) என்றும் கூறலாம்!

தூரமானி (odometer), விரைவு மானி(speedo meter), பயண மானி (Trip meter) மூன்றும் இணைந்த காட்டி (Indicator) மற்றும் எரிபொருள் அளவு காட்டி (Fuel gauge) இணைந்த வட்டவடிவக் கண்ணாடிப் பெட்டகம் நவீன மின்னியல் சாதனையாகும்.

இலக்கக் குறிகாட்டிகள் (digital) மேலும் நவீனமாகி உள்ளன – இப்போது செல்லும் வேகத்தில் எரிபொருள் இருப்பு எவ்வளவு தாங்கும் என்ற நுண்ணிய விவரங்கள் கொண்ட தகவல்காட்டிகள் வந்துவிட்டன.

உதையுந்தியில் பாதத்தை வைத்து இறகுத் தொடுதல் செய்தாலே (feather touch) ஈருருளியானது உந்து சக்தியைப் பெறும் முன்னேற்றம் வந்துள்ளது..

ஈரருருளி சகடப் புறவளையம் (Tyre) இப்போது அகவளையமில்லா (Tubeless) இனமாகவும் வந்துவிட்டது.

துளைச் சேதம் (Puncture) ஏற்பட்டாலும் காற்றிழப்பு உடனடியாக நிகழாமல், ஓட்ட நிறுத்தம் (Halting) ஏற்படும் வரை சிறிது சிறிதாகக் காற்று இறங்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

இப்படிப்பட்ட ‘அகவளையமில்லா சகடப் புறவளையங்கள்’- (Tubeless Tyres) ஒரு நவீனமான காற்றுத் துருத்தியின் மூலம் (valve tube) செயல்படுகின்றன!

இப்படியே படி ராசா!

“ஐயோ இப்படிப் படிச்சிட்டு நான் வெளிநாடு போக நேர்ந்தால் உதையுந்தி, எரியூட்டி, எரிபொருட் கலவையகம்… இதெல்லாம் அவங்களுக்குப் புரியும்?”

“அப்படி வெளிநாடு போறதுக் கெல்லாம் வேற ஆளுங்க இருக்கு ராசா! நீயும் நானும் தமிழ்நாட்டுக்கு உள்ள குண்டு சட்டில குதிரை ஓட்ட ‘ஒடுக்கி’- ‘முடுக்கி’ போதும் ராசா! வா நாம இப்படிக்கா போவம்!”

~ முரளி சீதாராமன்

1 COMMENT

  1. தமிழ் மட்டும் போதும் ஹிந்தி வேண்டாம் ஆங்கிலம் வேண்டாம் என்பவர்களுக்கு கட்டுரை சரியான செருப்படி; கொஞ்சம் மரியாதைக்காக வேண்டுமானால் சவுக்கடி என்று சொல்லலாம். தமிழன் கிணற்று தவளையாக இனியும் எத்தனை காலம் இருக்கப்போகிறான்? தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தால் தானே உலகம் புரியும். அதற்கு தேவை பல மொழிகள். அறிந்தால் நலம். இல்லையென்றால் முட்டாளாகவே முன்னேறாமல் மரணிக்க வேண்டியது தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories