December 5, 2025, 8:08 PM
26.7 C
Chennai

உயிர் கொடுத்து உழைப்பு கொடுத்து தமிழ் வளர்த்தவர்கள்

201804280048520715 UV Swaminatha Iyer Memorial Day April 28 1942 SECVPF - 2025

தமிழை…….வளர்த்தவர்கள்……
~~~~~~~~~~~~~~~~~~~~~~
“ஐயா ,ஐயா”…
வெளியில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டதும் அந்த வீட்டுக்குள் இருந்த முதியவர் வாசலுக்கு வந்தார்.
யாராவது உதவி கேட்டு வந்திருப்பார்கள் என நினைத்தவருக்கு ஆச்சரியம், வந்திருப்பவரை பார்த்தால் பெரிய மனிதராகவும், நல்ல படிப்பாளியாகவும் தெரிந்தார். அவரது முகத்தில் அப்படி ஒரு தெளிவு இருந்தது.

“என்ன வேண்டும்?”
“தங்கள் வீட்டில் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய இருப்பதாக கேள்விப்பட்டு வந்தேன். அவற்றில் தமிழ்மொழியின் சிறந்த இலக்கியங்களும் இருக்கலாம். ஓலைச்சுவடியில் உள்ளவற்றையெல்லாம் எழுதி புத்தகமாக அச்சிட்டு வருகிறேன். உங்கள் வீட்டில் உள்ள ஓலைச்சுவடிகளை தந்தால் அவற்றை பார்த்து எழுதிவிட்டு திருப்பி தந்துவிடுகிறேன். இந்த உதவியை மறுக்காமல் தாங்கள் செய்தல் வேண்டும்”.

இதனைக் கேட்ட வீட்டுக்காரருக்கு கோபம் வந்துவிட்டது.
“நாளை ஆடிப்பெருக்கு. ஆற்றில் விடுவதற்காக வீட்டில் கொஞ்சம் ஓலைச்சுவடிகள் வைத்திருக்கிறேன். அவ்வாறு செய்தால் புண்ணியம். அது பொறுக்கவில்லையா உமக்கு? அவற்றை தரமுடியாது” எனக்கூறி வந்தவரை விரட்டினார்.

பெரியவர் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் வீட்டுக்காரர் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்காரருக்கு தெரியாமல் வேறொரு வீட்டுத்திண்ணையில் படுத்துக்கொண்டார். கடும்குளிரும் பனியும் அவரை வாட்டின.

விடியற்காலையில் கோழிகூவியதும் அந்த வீட்டுக்காரர் ஓலைச் சுவடிகளை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு செல்வதை பார்த்தார். அவரை பின்தொடர்ந்து மறைந்து மறைந்து சென்று ஒரு புதருக்கு பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டுக்காரர் நீராடியபின் ஓலைச்சுவடிகள் ஆற்றில் விட்டுச் சென்றார். அவர் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை அப்பெரியவர் தேடி எடுத்தார். அங்கேயே வாசிக்கத் தொடங்கினார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் தேடித்தேடி அலைந்த அருந்தமிழ் இலக்கியங்கள் சில அச்சுவடிகளில் இருந்தன. (இந்த நிகழ்ச்சி இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் நடந்தது).

இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். இவ்வாறு பல இன்னல்கள்பட்டு வீடுவீடாகச் சென்று அழியவிருந்த பல ஓலைச் சுவடிகளை சேகரித்து புத்தகமாக அச்சடித்து வெளியிட்டார்.

அவ்வாறு அழிவு நிலையில் இருந்த பல இலக்கியங்கள் இவரால்தான் மீட்கப்பட்டன.

இப்படியாக அவரால் ஓலைச் சுவடிகளாக மீட்கப்பட்டு அச்சேறிய தமிழ் இலக்கியங்கள்
எட்டுத்தொகை 8
பத்துப்பாட்டு 10
சீவக சிந்தாமணி 1
சிலப்பதிகாரம் 1
மணிமேகலை 1
புராணங்கள் 12
உலா 9
கோவை 6
தூது6
வெண்பா நூல்கள் 13
அந்தாதி3
பரணி 2
மும்மணிக்கோவை 2
இரட்டைமணிமாலை 2
பிற பிரபந்தங்கள் 4…..

அந்தப் பெரியவர் வேறுயாருமல்ல, உத்தமதானபுரம், வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன் என்று அழைக்கப்பட்ட நம் தமிழ்தாத்தா உ.வே.சா என்று அன்பாக தமிழர்களால் அழைக்கப்படும் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். காலம் 1853-1941.

CBSE ஆறாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து……

இப்போது சொல்லுங்கள் …

உண்மையில் கஷ்டப்பட்டு தமிழை வளர்த்தது யார்?

தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் யார்?

1 COMMENT

  1. தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயர் திராவிடம் பேசும் கட்சிகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார். அது போல தான் மதுரையில் ஆலய பிரவேசம் செய்த வைத்யநாத ஐயர். மஹர் என்ற தலித் இனத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் படிக்க உதவியவர் அவரது பள்ளி ஆசிரியர்; உண்மையை சொல்லப்போனால் அம்பேத்கர் என்ற பெயரைச் சூட்டியவர் அந்த ஆசிரியர் தான். மஹாகவி பாரதி தாழ்த்தப்பட்ட பையனுக்கு தனக்கு குலத்தையே எதிர்த்து பூணுல் போட்டார். இவர்கள் எல்லோருமே பிராமணர்கள். ஆனால் பெரியாரிசம், அம்பேத்கரிசம் பேசும் வீணர்கள் அந்தப் பெரியவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் தன்னல மற்ற தொண்டு உள்ளத்தையும் தமிழ் பற்றையும் மறைத்து, ஏதோ இவர்கள் தான் தமிழ்க் காவலர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். பெரியார் தமிழைக் கேவலமாகப் பேசியவர் என்று எத்தனை பேருக்கு தெரியும்? பாரதியாரும் வைத்தியநாத ஐயரும் பகுத்தறிவாதிகள் இல்லையா? அரசியல் ஆதாயம் தவிர வேறொன்றுமில்லை. மேற்சொன்ன அறிஞர்கள் தமிழை பாதுகாத்தவர்கள்; வளர்த்தவர்கள். தற்கால மடையர்கள் தமிழை வைத்துப் பிழைக்கும் வியாபாரிகள். ஹிந்தி வெறுப்பார்கள் ஆனால் தங்கள் பள்ளிகளில் அதையே சொல்லிக் கொடுப்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories