spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇதன் பெயர் இழிவான அறிவு ... பகுத்தறிவல்ல!

இதன் பெயர் இழிவான அறிவு … பகுத்தறிவல்ல!

- Advertisement -

“இந்தியாவின் மானம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறதே!” என்கிற தலைப்பில் விடுதலை (29-06-19) ஞாயிறு மலரில், சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல் பற்றிய இந்தியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் விமர்சன அறிக்கையை வெளியிட்டு சுய இன்பம் அடைந்துள்ளது. “இந்திய கதை அமெரிக்கா வரை சென்று இந்தியாவின் மானம் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடப்படுகிறதே!
இந்தியாவில் சிறுபான்மை யினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதி ரான தாக்குதல், இந்துமதவாத குழுக்களின் வன்முறை செயல்கள் தொடர்ந்து அதிகரித் துள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மோடி அரசில் மதச் சார்பின்மையின் வண்டவாளம் அமெரிக்கா வரை ஊளை நாற்றமடிக்கிறது. இது நாடா – ஓநாய்களின் வேட்டைக் காடா? வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!” என எழுதி உள்ளது.

இந்தியாவில் பத்திரிகை நடத்துகிற விடுதலை பத்திரிகைகாரனே, சாமான்ய மக்களின் மீதான மதவாதிகளின் தாக்குதலை “தாக்கியவனின் மதம் பார்த்து வெளியிட்டு அரைவேக்காட்டு தனமான பத்திரிகை நடத்துகையில், அமெரிக்காகாரன், “இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தாக்கப் படுகிறார்களா, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதில்லையா” என்பதை யெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற அறிவில்லாமல் (உள்ளூர்காரனாம் தி.க.காரனுக்கே அந்த அறிவில்லையே) தனக்கு கிடைத்த தகவல்களை வைத்து அறிக்கை தயாரிக்கிறான். இந்திய பத்திரிகைகளிலேயே பெரும்பான்மை சமூகம் தாக்கப்பட்டால், பல நேரங்களில் அவை செய்தியாவதில்லை. செய்தியானாலும் கண்ணுக்கு தெரியாத அளவு, சிறியதாய் போட்டு #வேசி_ஊடகங்கள் தங்கள் கடமையை முடித்து கொள்கின்றன. இந்திய ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு தானே அமெரிக்காக்காரன் அறிக்கை தயாரிக்கிறான். இதில் உள் நோக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லையே.

செய்தி வெளியிடுகிற விஷயத்தில் தி.க.காரனின் யோக்கியதையை பார்த்தோமேயானால், இவனுக் கெல்லாம் நாட்டின் மீது அக்கறை இருந்து எந்த செய்தியும் வெளியிடுவ தில்லை, தேசத்தை பழிக்க எந்த வகையிலாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என நாக்கை தொங்க போட்டு அலையும் இவனை போன்ற ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக கொண்டு, அமெரிக்காக்காரன் அறிக்கை தயாரித்தால் எப்படி இருக்கும். இன்றைய தினம் இரண்டு முக்கிய குற்ற செய்திகள் பல் வேறு செய்தி தளங்களில் வெளியாகி உள்ளது – மதவெறியை ஒழிக்க வந்த விடுதலையை தவிர. வெட்கங்கேட்ட விடுதலையில், அந்த செய்தி வராத நோக்கம், இரண்டிலும் குற்றவாளிகளாக சிறுபான்மை சமூகத்தினராக இருப்பதால். செய்திகளை பார்த்துவிட்டு, தி.க.காரன் பத்திரிகை நடத்துகிற யோக்கியதையை தனியே விமர்சிப்போம். அறிவு நாணயம் இருந்தால் அதற்கு பதில் சொல்லட்டும்.

முதல் செய்தி, விகடன்.காமில் வந்தது. “சென்னையில் ஆடு திருட வந்த கும்பலுக்கு நேர்ந்த சோகம்” என்கிற தலைப்பில் ஒரு செய்தி. “சென்னை அம்பத்தூர் புதூர் பகுதியில் ஆடு, மாடுகள் அடிக்கடி திருடப்பட்டன. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோவில் மூன்று பேர் வந்தனர். அவர்கள்மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். அவரைப் பிடித்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த நபரையும் ஆட்டோவையும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ஒப்படைக்கப் பட்டவர் பெயர் கான் என்றும், ஓட்டேரியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர், புதூர் பகுதியில் ஆடுகள், மாடுகளைத் திருடி கறிக்கடைகளில் விற்று வந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து புதூர் பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் திருட்டு போய்விட்டன. ஆடு மாடுகள் திருட்டு குறித்து புகார் கொடுத்தால் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. நாங்களே ஆடு,மாடு திருடர்கள் குறித்து ரகசியமாக விசாரித்துவந்தோம். இந்தச் சமயத்தில்தான், ஆட்டோவில் வந்த மூன்று பேர் கன்றுக்குட்டியை திருடி ஏற்ற முயன்றனர். இதனால் அந்த ஆட்டோவை மடக்கி
பிடித்தோம். ஒருவர் மட்டும் எங்களிடம் சிக்கினார். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளோம்” என்றனர்.

இந்த சம்பவம் கர்நாடகாவிலோ, பிற வட இந்திய மாநிலத்திலோ நடந்திருந்தால், வெட்கங்கெட்ட விடுதலை உட்பட சகல ஊடகத்திலும், “சிறுபான்மை சமூகத்தினர் மீது இந்துத்வா தாக்குதல்” என செய்தி வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்து கொண்டிருப்பர். அவனுக்கு வேண்டியதெல்லாம் பரபரப்பூட்டும் செய்தி. இவனது செய்திகளை பார்த்து அறிக்கை தயாரிக்கிற அமெரிக்காரனின் அறிவு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தால் பாதிக்கப் படாதா என்றெல்லாம் சிந்திக்காமல் அறிக்கை தயாரிக்கும். இதோ முஸ்லிம்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெரும்பான்மை சமூக பெண்கள்… “இத்தகைய செய்திகளை வெளியிட்டால் தீட்டு” என நவீன தீண்டாமை பார்த்து, இத்தகைய செய்திகளை விலக்கி வைக்கும் தி.க.காரனின் பத்திரிகையாம் விடுதலை.

“பாலியல் வல்லுறவு: எதிர்த்த தாய் மற்றும் மகள் பிகாரில் மொட்டையடிக்கப்பட்ட கொடூரம்” என்கிற தலைப்பில் இந்து தமிழ்.காமில் வந்த செய்தி. இந்து பத்திரிகையின் இணையதளத்தில் வந்த பல செய்தியை தி.க.காரனின் பத்திரிகையை வெளியிட்டுள்ளது, இருப்பினும் பழுதுபட்ட ஈரோடு கண்ணாடியை மாட்டி கொண்டு இருப்பதால் விடுதலை பத்திரிகையாசிரியர் கி.வீரமணிக்கு, இந்த செய்தி கண்ணில்படவில்லை. அய்யா கி.வீரமணி, “ஒண்ணு கண்ணாடியை மாற்றுங்க இல்லை ஆசிரியர் பதவியை விட்டு விலகுங்க. இரண்டும் செய்யாம்ம இரண்டுங்கெட்டானா எதுக்கு. “பிகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் இந்த தாய் மற்றும் மகளிடம் தவறாக நடக்க சிலர் முயற்சி செய்தனர். அதனை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது, அப்பகுதியை சேர்ந்த வார்ட் கவுன்சிலர, 2 பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிசீர்த்திருத்துபவரை அழைத்து தாய் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து அவர்களை கிராமம் முழுவதும் வலம் வரச் செய்தனர். இதனை தொடர்ந்து தாயும், மகளும் இது குறித்து புகார் செய்ததன் அடிப்படையில், வார்ட் கவுன்சிலர் மொஹம்மது குர்ஷித், கிராமத் தலைவர் மொஹம்மது அன்சாரி மற்றும் முடிதிருத்தம் செய்த தஷ்ரத் டாகூர் உள்ளிட்ட 7 பேர் மீது முதல்கட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்தனர். ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டு, இந்த செய்தியை வெளியிடுவதில் தி.க.காரனுக்கென்ன கஷ்டம்.

தி.க.வில் அருள்மொழி, ஓவியா, ஷாலினி, சல்மா என ஏகப்பட்ட பெண் போராளிகள் இருந்தும் என்ன புரியோஜனம். கி.வீரமணியைவிட கேவலமாக, பாதிக்கப்படும் பெண்களை மதம் பார்த்து விமர்சிக்கும் கேவலப்புத்திகாரர்களாய் இருக்கிறார்களே. இவர்கள் எழுதுவதை பார்த்து அறிக்கை தயாரிக்கிற அமெரிக்காரனின் அறிக்கை எப்படி இருக்கும். இதே அமெரிக்கக்காரன் முன்பொரு ஆய்வு நடத்தி சொன்னான். “பெண்களுக்கெதிரான வன்கொடுமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது” என்று. அதற்கும் தி.க.காரன், “நாடா இது” என பொங்கினான். மதம் பார்த்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டு பொங்கும் தி.க.காரனை போன்ற ஈனப்பிறவிகள் வாழும் நாடு, பெண்களுக்கெதிரான வன்கொடுமையில் முதலிடத்தில் இல்லையென்றால் தானடா ஆச்சர்யம்.

இந்த நாட்டில், முக்கியமாய் வட இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தால் சிறுபான்மை சமூகம் எந்தளவு பாதிக்கப்படுகிறதோ, அதே அளவு – இன்னும் சரியாக சொல்வாதானால், அதை காட்டிலும் அதிகமாக சிறுபான்மை சமூகத்தால் பெரும்பான்மை சமூகம் பாதிக்கப்படுகிறது. அதை நேர்மையாக கண்டிக்காத தி.க.காரனை போன்ற பகுத்தறிவாளிகளே, “மத மோதலுக்கு மேலும் வலுப்பெற காரணமாய் இருக்கிறார்கள். மதவெறியை, மத அட்டூழியத்தை கண்டிப்பதாக இருந்தால், மதம் பார்க்காமல் கண்டிக்க வேண்டியது தானே. அதை நேர்மையாங செய்ய உனக்கு வலிக்கிறது என்றால், “மதவாதம்” என்றெல்லாம் வாயை திறக்காதே. தி.க.காரனான் என்றைக்கு நேர்மையாக பேசக்கற்று கொள்கிறானோ, அன்று வாயை திறக்கட்டும். அரைவேக்காட்டு அறிவுடன் மானமிகு என கூறி கொள்வது வெட்கத்திலும் வெட்கக்கேடடா!!!!

~ செல்வராஜ் பகுத்தறிவுகாரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe