646483 332025 dwayne bravo pti - 2026வெஸ்ட் இன்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ, தமிழ் படம் ஒன்றில் பாடல் பாடவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ, கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் இவர் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வரும் பிராவோ, தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற சித்திரம் பேசுதடி படத்தின் 2-ஆம் பாகத்தில் பாடல் பாட உள்ளார்.

மேலும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படத்திலும் இவர் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending