Double bean rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: டபூள் பீன்ஸ் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Double bean rice - 2026

டபிள் பீன்ஸ் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
டபிள் பீன்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

வறுத்து பொடிக்க:

கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு மிளகு அளவு அல்லது
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

தாளிக்க:
எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லை இலை – சிறிது
நெய் – 1 டீஸ்பூன் (விருப்பப் பட்டால்)
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

செய்முறை:

டபிள் பீன்ஸை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் கசகசாவைப் போட்டு சில வினாடிகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய், பெருங்காயம் ஆகிய வற்றை ஒவ்வொன் றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக் கவும்.

வறுத்த பொருட்கள் ஆறியதும், வறுத்த கசகசா, ஒரு சிட்டிகை உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள டபிள் பீன்ஸை சேர்க்கவும்.

அத்துடன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்து வைத்துள்ள பொடி ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறி விடவும்.

கடைசியில் சாதத்தையும், சிறிது உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நெய் சேர்ப்பதானால் அதையும் சேர்த்துக் கிளறி, கொத்து மல்லி இலையைத் தூவி இறக்கி வைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.