Department Tomato Rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினை தக்காளி சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Department Tomato Rice - 2026

தினை தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
3 பேர்
1கப் தினை
1பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது
2தக்காளி பொடியாக அரிந்தது
4பச்சை மிளகாய்
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1அங்குலம் பட்டை
3கிராம்பு
1ஏலக்காய்
1மலலிமொட்டு
1அன்னாசி மொக்கு
1ஸ்டார் மொட்டு
1பிரியாணி இலை
1 டீஸ்பூன் சோம்பு
1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
1டீஸ்பூன் வரமிளகாய் தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
1டேபிள்ஸ்பூன் உப்பு
1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
எங்கள் வீட்டில் கொஞ்சம் பச்சை பட்டாணி இருந்ததால் அதை நான் வீண் செய்யாமல் இந்த தக்காளி சாதத்தில் சேர்த்துக் கொண்டேன் இதுபோல் தாங்களும் ஏதாவது காய்கறிகள் வீட்டில் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். அரிந்த தக்காளி பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் மசாலா பொருட்களை சேர்த்து சிவக்க வதக்கவும்.

பிறகு வெங்காயத்தை வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்பு தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தங்கள் இஷ்டப்பட்டால் பட்டாணி சேர்த்துக் கொள்ளவும். அல்லது காய்கறிகள். இவை செய்வதற்குள் பத்து அல்லது பதினைந்து நிமிடம் திணையை கழுவி ஊற வைக்கவும். ஊற வைத்த தினையை தண்ணீர் வடித்து விட்டு காய்கறிகளுடன் சேர்த்து லேசாக சூடு ஏற வதக்கவும்.

பிறகு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், வரமிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். ஒரு கப் அளவிற்கு இரண் டே கால் அல்லது இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன் குக்கரை மூடி இரண்டு சவுண்ட் விடவும். பிறகு மிதமான தீயில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் குக்கரை அடுப்பில் வைத்திருக்கவும். பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்க்கவும். வெந்த தினை அரிசி மேல் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்.

சுவையான தக்காளி தினை சாதம் தயார். எப்போதும் போல் இதற்கும் தயிர்ப்பச்சடி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.