health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சோகை, பற்கள், தொப்பை, வெண்புள்ளி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

சோகை நோய்க்கு…

தினமும் இரவு சாப்பாட்டிற்குப் பின் நன்கு பழுத்த விளாம்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வர சோகை நோய் நீங்கி இரத்தம் விருத்தியாகும்.

வெண் புள்ளி மறைய…

மான் கொம்பை காடியில் உறைத்து வெண் புள்ளியில் பூசி உடம்பு வியர்க்கும் வரை வெயில் நின்றால் நிறம் மாறி விடும். இது சூட்டினால் இரத்தம் கெட்டு ஏற்படும் வெண் புள்ளிகளுக்கு. வெண் குஷ்டத்திற்கு அல்ல.

பற்களைப் பாதுகாக்க…

ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து இத்துடன் சுக்கு ஓமம்,இஞ்சி இவைகளையும் பொடி செய்து கலந்து பற்பொடி உபயோகித்து வர பற்களில் எந்தத் தொந்தரவு ஏற்படாது. பற்கள் பளிச்சிடும்.

வயிறு, தொப்பை பெரிதாகி விட்டதா?

  • சிலருக்கு வயிறு பானை போல் பெருத்து இருக்கும். இவர்கள் தினசரி அதிக அளவு வாழைத் தண்டுச் சாப்பிட்டுவர வயிறு சுருங்கும். தயிர், மோர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.

குழந்தை விரல் சூப்புகிறதா?

ஹோமியோபதி மருத்துவமுறையில் வீரியப்படுத்தப்பட்ட சாப்பாட்டு உப்பை அரை அவுன்ஸ் வெந்நீரில் கலந்து இரண்டு சொட்டுகள் வீதம் சில வாரங்கள் உள்ளுக்குக் கொடுத்து வர குழந்தை விரல் சூப்பும் பழக்கத்தைத் தானே நிறுத்தி விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.