ஆரோக்கிய சமையல்: தினை பூரணக் கொழுக்கட்டை!

Published:

thinai Purana kozhukattai - 2026

தினை பூரணக் கொழுக்கட்டை

தேவையானவை:

தினை மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – கால் கப்
உப்பு – கால் டீஸ்பூன்
சுடுநீர் – தேவையான அளவு

பூரணம் செய்ய:

வறுத்த எள் – ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
வெல்லம் – அரை கப்

செய்முறை:

தினை மாவுடன் பச்சரிசி மாவு, உப்பு, சுடுநீர் சேர்த்து நன்கு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்குப் பிசையவும். எள்ளுடன் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதுவே பூரணம். பிசைந்து வைத்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டி, நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஒரு கொதிவிட்டு கரைந்தபின் வடிகட்டி, அதிலும் மாவைப் பிசைந்துச் செய்யலாம்

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img