veg masala - 2026

பூரி சப்பாத்திக்கு செம.. வெஜிடபிள் மசாலா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
veg masala - 2026

வெஜிடபிள் மசாலா
தேவையான பொருட்கள்:

கேரட் – 2
உருளைக்கிழங்கு – பெரியது
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
முட்டைக்கோஸ் – 100 கிராம்
காலிப்ளவர் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் – தாளிக்கத் தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், பீன்ஸ், கோஸ், காலிப்பிளவர், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு குக்கரை மூடி விசில் போடவும்.

வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.