tiffen sambhar - 2026

இப்படி செஞ்சு பாருங்க டிபன் சாம்பார்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
tiffen sambhar - 2026

டிபன் சாம்பார்

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா கால் கப் தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு – தலா ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்) கீறிய பச்சை மிளகாய் – 8 (காரத்துக்கேற்ப) புளி – பெரிய நெல்லிக்காய் அளவு சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  13ம் ஆண்டில் தொடரும் மனதின் குரல்; பிரதமர் மோடி சொன்ன விஷயங்கள்!