சின்ன சின்ன நுணுக்கங்கள் செய்து அசத்துங்க சமையல

Published:

samaiyal 1 - 2026தயிர் புளிக்காமல் இருக்க

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

கீரை பசுமையாக ருசியாக இருக்க...

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

பிரியாணி அடிப்பிடித்து விட்டால்..

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

 பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்க.

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க.

சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

 பூரி நமத்துப் போகாமல் இருக்க.

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது,தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.

கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது

கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.

மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க “பளிச்’சென்று இருக்கும்.

பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க,

பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா?

கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.

வடைக்கு அரைக்கும்போது

மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

பஞ்சு போன்ற இட்லிக்குக்கு

கிரைண்டரில் உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் கிடைக்கும். இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும்

Related articles

Recent articles

spot_img