திருப்பூரில் இன்று தாய் மற்றும் இரு மகன்கள் படுகொலை..

திருப்பூரில் இன்று தாய் மற்றும் 2 மகன்களை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் கொலை செய்த வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமாரி ( 38). இவரது மகன்கள் தர்னீஷ் (9), நித்திஷ் (6). முத்துமாரி தனது 2 மகன்களுடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அருகே வாவிபாளையம் சேடர்பாளையம் அரசு பள்ளி வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்
இன்று காலை முத்துமாரி வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. மேலும் வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே ஓடினார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது முத்துமாரி மற்றும் அவரது மகன்கள் தர்னீஷ், நித்திஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது முத்துமாரி மற்றும் அவரது மகன்களின் உடல்களில் கத்தியால் குத்தியதற்கான தடயங்கள் இருந்தது. இதனால் தப்பியோடிய வாலிபர்தான் 3பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.இதையடுத்து 3பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 3பேரையும் கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை பிடிக்க போலீசார் அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வாலிபர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் பிடிபட்டால் 3பேர் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

இதனிடையே வாடகை வீடு உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் முத்துமாரி மற்றும் அவரது 2மகன்களை அழைத்து வந்ததுடன், பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் முன்பு இருந்த வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்கு போதியஇடவசதி இல்லாததால் இங்கு குடியேற வந்ததாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி வீட்டு உரிமையாளர் வாடகைக்கு வீட்டைகொடுத்துள்ளார்.

அதன்பிறகு அந்த நபர் முத்துமாரி வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அவர்தான் 3பேரையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் முத்துமாரியின் கணவரா? அல்லது கள்ளக்காதலனா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.தாய், இரு மகன்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1653293102360 - 2026
202205231600074050 Tamil News tamil news mother and 2 sons murder in tirupur SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories