
ராஜபாளையம் அருகே செங்கல் சூளையில் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலத்தை மீட்ட போலீசார் கள்ளக்காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாப்பையன் இவரது மனைவி காளீஸ்வரி ( 45 )இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ளது பெண் குழந்தை டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார் இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முத்துச்சாமி வயது 55 இவர்கள் இவருக்கும் காளீஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
முத்துச்சாமியின் மனைவி முத்துச்சாமி பிரிந்து வாழ்ந்து வருகிறார் காளீஸ்வரி முத்துசாமிக்கும் பல ஆண்டுகளாக இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது இரவில் காளீஸ்வரி முத்துச்சாமியை முத்துசாமியின் அகத்திக்காட்டு அருகே உள்ள செங்கல் சூழலையில் சென்று சந்திப்பதும் இருவரும் மது அருத்தவிட்டு அங்கு தனிமையில் உல்லாசமாக இருப்பது என வழக்கமாக இருந்துள்ளது .
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்ததாக கூறப்படுகிறது . இரவு காளீஸ்வரி முத்துச்சாமியின் செங்கல்சூளைக்கு சென்ற பொழுது இருவரும் மது அருந்தி உல்லாசம் இருந்து போதுவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த முத்துசாமி காளீஸ்வரியை கம்பால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து பஞ்சாயத்து தலைவர் தகவல் கொடுத்துள்ளனர் .
பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சேத்தூர் ஊரக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு முத்துச்சாமி கைது செய்தனர் .முத்துசாமி கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை கற்பழித்த வழக்கில் சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது மேலும் முத்துசாமி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது