சிபிஐ அதிகாரி என கூறி பெண்ணிடம் ஏமாற்றி தங்க தாலி இரு சக்கர வாகனம் தங்க செயின் செல்போன் பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்து போலீசார் செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம் டி ஆர் நகர் 4வது சேர்ந்த சுகுமார் – கோகிலா தம்பதியர்
சுகுமார் என்பவர் தனியார் கம்பெனியில் எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி வாழவந்தான் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார்
இவர்களுக்கு 13 வயது பெண் குழந்தையும் 8 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்
இவரது மனைவி கோகிலாவிற்கு சம்பவத்தன்று ஒரு செல் மூலம் அழைப்பு வந்துள்ளது
அதில் நான் ஒரு சிபிஐ அதிகாரி என கூறி நான்ஒரு திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளோம் அவரிடம் உங்கள் நம்பர் இருந்தது அதனால் உங்களை அழைத்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளான்
மறுநாள் காலையில் கோகிலா வேலைக்கு செல்லும்போது வழிமறித்து அந்த நபர் நான் தான் அந்த சிபிஐ அதிகாரி உங்களை விசாரிக்க வேண்டும் விருதுநகர் அலுவலகத்திற்கு வாங்க என கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
விருதுநகர் அல்லம்பட்டி விளக்கு அருகில் வந்தவுடன் அவரிடம் இருந்த செல்போன் செயின் தங்கதாலி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் கோகிலாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மதுரை கப்பலூர் அருகே டோல்கேட்டில் அருகே உள்ள ஹோட்டலில் இருங்க
எனது மேல் அதிகாரியை அழைத்து வருகிறேன் கூறிவிட்டு அவன் கையில் இருந்த பையை கோகிலாவிடம் பையில் துப்பாக்கி இருப்பதாக பத்திரமாக வைத்திரு பை உள்ளே துப்பாக்கி உள்ளது என கூறி தப்பி சென்று விட்டான்
வெகு நேரமாக வராததால் கோகிலா பையை திறந்து பார்த்த போது அதில் வெறும் செருப்பு மட்டும் உள்ளது என ஏமாற்றம் அடைந்தார்
அதன் பின் மதுரை சென்று அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்து
நடந்த விபரங்களை அனைத்தையும் கோகிலா குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்
இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கோகிலா என்பவர் தன்னை ஏமாற்றியவர் சிபிஐ அதிகாரி எனக் கூறி நகை செல்போன்களை பறித்து சென்றுள்ளார் என புகார் செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அன்புகுமாரின் செல்போன் டவர் லொகேஷன் செல்போன் டவர் லொகேஷன் வைத்து அந்த பகுதிகளில் உள்ளி சிசிடிவி பதிவுகளை வைத்தும் விசாரணை தொடங்கினார்
விசாரணையில் அன்புகுமார் திண்டுக்கல் வேலூர் காட்பாடி சென்னை மீண்டும் திண்டுக்கல் சென்றதாக செல்போன் டவர் லொகேஷன் காண்பித்துள்ளது
டவர் லொகேஷனில் காண்பித்ததை பார்த்து காவல்துறையினர் குழம்பி விட்டனர் எங்கு செல்வது என்று தொரியாமல் திகைத்து நின்றனர்
இந்நிலையில் மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து டவர் லொகேஷன் வேலூர் மாவட்டம் கொண்டாங்குப்பம் பகுதியை காண்பித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிகாலை கொண்டாங்குப்பம் பகுதியில் உள்ள அந்த வீட்டில் புகுந்து பார்த்தபோது அங்கு அன்புகுமார் இருந்தது தெரியவந்தது
அவருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவரை அழைத்து அருப்புக்கோட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைமேற்கொண்டு வந்தனர்
விசாரணை நடத்தியதில் அவர் வேலூரில் உள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்தில் சுவற்றில் எழுதிய அனைத்து நம்பர்களுக்கும் போன் செய்ததாகவும் அதில் ஒரு நம்பர் தவறுதலாக கோகிலா எண்ணிற்கு சென்றதாக கூறப்படுகிறது
அதன் பின் மீண்டும் கோகிலாவிற்கு வேறு ஒரு எண்ணிலிருந்து அவரே பெண்குரலில் பெண் SI போல பேசுவதாக கூறி சிபிஐ அதிகாரி உன்மீது அளவு கடந்த பாசம் ஆசை வைத்திருப்பதாகவும் பெரிய அதிகாரி அவரை கைக்குள் வைத்து வைத்துக்கொள் அவர் உனக்கு எது வேண்டுமானாலும் செய்வார் அவர் வந்தவுடன் உன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அவர் கழுத்தில் போட்டு விடு அவர் கூப்பிடும் இடத்திற்கு விசாரணைக்கு சென்று விடு என பென் குரலில் அவரே
கூறியுள்ளதாக கூறிப்படுகிறது
அதனை நம்பிய கோகிலா சிபிஐ அதிகாரி என கூறிய அன்புகுமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார் வந்தவுடன்
அல்லம்பட்டி விளக்கில்
சென்றவுடன் கோகிலா தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அன்புகுமார் கழுத்தில் போட்டுவிட்டு அவர் கேட்டது போல் செல்போன் செயின் பொருட்களையும் கொடுத்துவிட்டு சென்றதை ஒப்புக்கொண்டார்
அதை வாங்கிக் கொண்ட அவர் கோகிலாவை அழைத்து கப்பலூர் அருகே ஒரு ஓட்டலில் விட்டு விட்டு சென்றதை ஒப்பு கொண்டுள்ளார்
மேலும் ஏமாற்றி வாங்கிய தாலி செல்போன் செயின் ஆகியவற்றை திண்டுக்கல் வகான காப்பகத்தில் தனது இருசக்கர வாகனத்தில் டூல்ஸ் பையில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதால் இருசக்கர வாகனமும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
