திருச்சுழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரி மகள்
அன்னலட்சுமி அதே ஊரைச் சேர்ந்த காமராஜூக்கு திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், அன்னலட்சுமி மற்றும் காமராஜ் தம்பதிகளுக்கு இருந்து வந்த குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை வரும் போது, அன்னலட்சுமியின் உடன்பிறந்த தம்பியும், கொலையுண்டு இறந்து போன பொன்ராஜ் என்பவர் காமராஜை சத்தம் போட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக காமராஜுக்கு, பொன்ராஜ் மீது முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பொன்ராஜ் தனது அக்காவான அன்னலட்சுமியின் சிறு குழந்தைகளை துாக்கி கொஞ்சி வந்ததை பிடிக்காமல் காமராஜ் அடிக்கடி பொன்ராஜூடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அன்னலட்சுமி மற்றும் காமராஜ் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளை பொன்ராஜ் துாக்கி கொஞ்சியதையும், ஏற்கனவே பொன்ராஜூன் இருந்து வந்த முன் பகைமையை மனதில் வைத்து பொன்ராஜ்
ஆலடிபட்டியில் உள்ள அவரது வீட்டு முன்பு இருந்த போது அவரது அக்கா கணவர் காமராஜ் வீட்டிற்கு கத்தியுடன் சென்று அங்கு வீட்டு முன்பு இருந்த பொன்ராஜை கையில் வைத்திருந்த கத்தியால் அவரது இடது பக்க தொடையில் மர்ம உறுப்பு அருகே பலமாக குத்தியும், வலது பக்க மண்டையில் வெட்டியும் காயங்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


இதனையடுத்து, பலத்த காயம்மடைந்த பொன்ராஜை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, சிகிச்சையில் இருந்து வந்த பொன்ராஜ் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, பொன்ராஜ் தாய் சுந்தரி கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் காமராஜைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.