காதலியை ‘ஸ்குரு டிரைவரால்’ 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த நபர்..

1058517 ads - 2026

பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து ‘ஸ்குரு டிரைவரால்’ 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த பஸ் கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர். காதலியை கொலை செய்ய அவர் விமானத்தில் வந்துள்ளார். காதலியின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, நீல்குஷம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர் – கோர்பா இடையே செல்லும் தனியார் பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது, அந்த பஸ் கண்டெக்டரான ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஷபாஷ் கானும், நீல்குஷமும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். குஜராத்தில் இருந்தவாறு நீல்குஷிடம் பேசி வந்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஷபாஷ் கானுடன் பேசுவதை விரும்பாத நீல்குஷ் அவருடன் காதலை முறித்து, செல்போன் அழைப்புகளை ஏற்காமலும், வாட்ஸ்-அப்பில் பிளாக் செய்தும் உள்ளார். அதன் பின்னர், தனது சொந்த ஊரான ஜாஷ்பூரில் ஒரு நபருடன் நீல்குஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷபாஷ் கானுடன் பேசுவதை நிறுத்திய நீல்குஷ் அந்த ஆண் நபருடன் பேசியுள்ளார். நீல்குஷ் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.

தன்னிடம் பேசும்படி நீல்குஷை அவர் மிரட்டி வந்துள்ளார். மேலும், நீல்குஷின் பெற்றோருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் ஷபாஷ் கான் சத்தீஷ்கரின் ராய்ப்பூர் வந்துள்ளார். ராய்ப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலாஸ்பூருக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த சனிக்கிழமை மாலை ஷபாஷ் கான் நீல்குஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் நீல்குஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்கும்படியும், தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷபாஷ் கான் தான் கொண்டு வந்த ‘ஸ்குரு டிரைவரால்’ நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். நீல்குஷ் கத்தி கூச்சலிடாமல் இருக்க தலையணையால் அவரது முகத்தை அழுத்தியுள்ளார்.

நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் ‘ஸ்குரு டிரைவரால்’ ஷபாஷ் கான் 51 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நீல்குஷ் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நீல்குஷை கொலை செய்த பின் ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வெளியே சென்ற நீல்குஷின் சகோதரன் நீலீஸ் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது சகோதரி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நீல்குஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நீல்குஷின் உடலில் 51 இடங்களில் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டிருப்பதும், மார்பு பகுதியில் மிகப்பெரிய அளவில் கொடூர காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலையை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய ஷபாஷ் கானை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories