புது புது திட்டம் மூலம் படம் பிடுங்கும் ஓடிடி தளங்கள்..

Published:

ரூ ஆயிரத்திற்கும் மேல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி சந்தாதாரர்களாக இருப்பவர்கள் கூட இப்போது பிரபலமான படத்தை பார்க்க தனியாக ரூ200 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அமேசானின் அறிவிப்பால் சந்தாதாரர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இப்போது பெரும்பாலும் வீடுதோரும் ஸ்மார்ட் டிவி இருப்பதால் ஓடிடி தளங்கள் பிரபலமடைந்துள்ளன.ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக செலுத்தி வீட்டில் நெட்வொர்க் அல்லது மொபைல் நெட்வொர்க் மூலம் ஓடிடி தளங்களில் புதிய படங்கள்,தொடர்கள் வெப் சீரியல் பார்க்கலாம்.இந்திய மொழிகளில் பல படங்கள் ஓடிடிதளங்களில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களின் ஆவலை தெரிந்துகொண்ட ஓடிடி தளங்கள் மேலும் பணம் பிடுங்கும் சூட்சுமத்தை கையாள்வதில் கவனம் செலுத்தி வருகிறது.குறிப்பாக ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் படங்கள் மற்றும் டிவியில் ஒளிபரப்பாகும் முன் ஓடிடியில் பார்க்கும் சீரியல்களில் விளம்பரங்களை வெளியிடுகின்றன.

விளம்பரம் இடையூராக இருப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் அவர்கள் டிவியில் விளம்பரங்கள் வருவதை தவிர்க்கும் சூப்பர் பணம் சம்பாதிக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்த ப்படுகிறது.

தற்போது அமேசான் பிரைம் பிரபலமான படத்தை வெளியிட்டு முதல் சில நாட்களுக்கு சந்தாவோடு கூடுதல் கட்டணம் செலுத்தி பார்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பணம் சம்பாதிக்க புது புது பிளான்களை அறிமுகம் செய்கிறது.

ALSO READ:  எதிரிகள் சிரிக்கிறார்கள்

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்.

மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களான பாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் ‘கே.ஜி.எஃ ப் 2’ படம் இணைந்துள்ளது.

இந்நிலையில் ‘கே.ஜி.எஃ ப் 2’ படத்தின்  ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரூ.200 (ரூ199)ரூபாய் செலுத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் பார்த்துக்கொள்ளலாம். சில நாட்கள் கழித்து  அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக அமேசான் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஏற்கனவே சந்தாதாரர்களாக இருப்பவர்கள் கூட படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அமேசானின் இந்த அறிவிப்பு  ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும் இது அமேசான் ப்ரைமில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வு டன் இருக்கவேண்டும்.அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை கட்டுப்படுத்தி வருவதுபோல் ஓடிடி தளங்களில் பணம் கட்டிய சந்தாதாரர்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் பிடுங்கும் திட்டங்களை அரசு கண்காணித்து கட்டுப்பாடுகளை புகுத்த வேண்டும்.

ALSO READ:  எதிரிகள் சிரிக்கிறார்கள்
IMG 20220520 WA0053 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img