ஜி20: சிறந்த லோகோ வடிவமைத்தால்.. ரூ.150000 லட்சம் பரிசு!

g 20 - 2026

இந்தியா ஜி20 மாநாட்டை டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 20, 2023 வரை நடத்துகிறது, இது 2023ல் இந்தியாவில் முதன்முறையாகக் கூட்டப்படும் ஜி20 மாநாடு ஆகும்.

இந்தியா, அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, பிரிட்டன், ரஷ்யா, தென் கொரியா, இந்தோனேசியா, பிரான்ஸ், சவூதி அரேபியா, இத்தாலி, துருக்கி, பிரேசில், கனடா, அர்ஜென்டினா, ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் ஜி20 அமைப்பின் உறுப்பினராக உள்ளன.

தற்போது இந்தியாவின் ஜி20 பிரசிடென்சிக்கான லோகோ வடிவமைப்பு போட்டியை வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) தொடங்கியுள்ளது.

MyGov படி, ஜி20 பிரசிடென்சிக்கான லோகோ “தேசம் முழுவதும் மற்றும் சர்வதேச அளவில், தனித்துவமான “இந்தியா” ஜி20 ஐ பிரதிபலிக்க வேண்டும்.

லோகோவில் என்னென்னவெல்லாம் இடம்பெற்று இருக்க வேண்டும் என்பது குறித்த சில முக்கிய விதிகளும் உள்ளன. இந்தியாவின் ஜி20 கருப்பொருள் முன்னுரிமைகள் லோகோவில் ஹைலைட் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

ALSO READ:  ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

அனைவருக்கும் நிலையான வளர்ச்சி, மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறை, சமமான மற்றும் நெகிழ்ச்சியான வளர்ச்சி, ஒரே குடும்பமாக உலகம் மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகள் போன்றவற்றை உணர்த்துவதாக அமைய வேண்டும்.

லோகோவானது ‘அம்ரித்கால்’ – 75 முதல் 100வது சுதந்திர தினம் வரையிலான இந்தியாவின் 25 ஆண்டு கால பயணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

தேசிய கொடியின் மூவர்ணத்தை கொண்டு கலை வெளிப்பாடுகள் இடம்பெற்றிருக்க வேண்டும், லோகோ முக்கியமாக ஜி20 ஐ பிரதிபலிக்க வேண்டும்.

மேலும் லோகோவில் இந்தியாவின் வளமான கலாச்சாரம், தத்துவம் மற்றும் பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் தேசிய சின்னங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அல்லது பிரதிபலிக்கும் சின்னங்கள் இருக்கலாம்.

லோகோ வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் உரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும், முதல் வெற்றியாளருக்கு ரூ.1,50,000ம், அடுத்த ஐந்து சிறந்த பதிவுகளுக்கு தலா ரூ.15,000ம், அடுத்த ஐந்து பதிவுகளுக்கு தலா ரூ.10,000ம் வரிகள் கழித்த பிறகு வழங்கப்படும். பரிசுத் தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் மட்டுமே மாற்றப்படும்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இந்த போட்டியில் நீங்கள் வடிவமைத்த லோகோக்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 7, 2022 ஆகும். லோகோவை பற்றிய சுருக்கமான விளக்கத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

mygov.in-ன் கிரியேட்டிவ் கார்னர் என்கிற பிரிவில் சமர்ப்பிப்பவர்களின் லோகோக்கள் மட்டுமே மதிப்பீட்டிற்கு பரிசீலிக்கப்படும், அனைத்து லோகோக்களும் சிறப்பு குழுவால் மதிப்பிடப்படும்.

மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்களின் MyGov புரொபைலில் உள்ள விவரங்கள் சரியானதாகவும், அப்டேட் ஆகவும் இருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories